வெல்லாவெளி கலைமகள் மகாவித்தியாலயத்தில் நடைபெற்ற வெற்றியாளர் பாராட்டு விழாவும்

 (எஸ்.நவா)

2018 ம் ஆண்டு A/L பரீட்சைக்குத் தோற்றி பல்கலைக்கழக அனுமதி பெற்ற இரு மாணவர்களும் அதே போல் 2018 ம் ஆண்டில் O/L பரீட்சைக்குத் தோற்றி A/L கற்பதற்கான அடிப்படை தகைமையைப் பெற்ற 15 மாணவர்களுக்கும் உயர்தர பிரிவினருக்காக நடைபெற்ற சமூக விஞ்ஞானப் போட்டியில் தேசிய மட்டத்தில் முதலாமிடம் பெற்ற மாணவி ஒருவரும் பாராட்டி பரிசளித்துக் கௌரவிக்கப்பட்டனர்.
வித்தியாலய அதிபர் திரு.ச.கணேசமூர்த்தி அவர்களின் தலைமையில் வித்தியாலய ஒன்று கூடல் மண்டபத்தில் (05.04.2019) வெள்ளிக்கிழமை அன்று நடைபெற்றது. 
பிரதம அதிதியாக போரதீவுப்பற்று கோட்டக்கல்வி அதிகாரி திரு.தா.அருள்ராஜா அவர்கள் வருகை தந்து சிறப்பித்திருந்தார். சிறப்பு அதிதியாக வித்தியாலய நுPளுஐ  இணைப்பாளரும் பட்டிருப்பு கல்வி வலய விஞ்ஞானப் பாட உதவிக் கல்வி பணிப்பாளருமான திரு.ரீ.நடேசமூர்த்தி அவர்கள் வருகை தந்து சிறப்பித்தார். விசேட அதிதியாக இவ் விழாவுக்கு அணுசரணை வழங்கிய கோவில் போரதீவு திவார்த்தகி துவாரகி மல்ரி சொப் உரிமையாளர் திரு.ம.கோபிநாத் அவர்கள் வருகை தந்து சிறப்பித்திருந்தார்.
இதை தவிர பெற்றோர்கள் நலன்விரும்பிகள் பழைய மாணவர்கள் என்போருடன் இவ் விழாவின் மற்றொரு அனுசரணையாளர் கோவில் போரதீவு  சி.பிரியதர்சன் அவர்களும் சமூகமளித்திருந்தார். அண்மைய பாடசாலை அதிபர்கள் ஊடகவியலாளர்களும் இதில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
விழாவைத் தொடர்ந்து 2019 முதலாந்தவணை இறுதி நாளை முன்னிட்டும் நடைபெற்றிருந்த பாடசாலை கல்விச் சுற்றுலா நேர்த்தியை முன்னிட்டும் வித்தியாலயத்துக் கணித்தாக இருக்கும் அரசடிப் பிள்ளையார் ஆலயத்தில் விசேட பொங்கல் வழிபாடுகளும் இடம்பெற்றன. இதில் மேற்படி அதிதிகளும் வலயக் கல்வி அலுவலக அலுவலகர்களும் கலந்து கொண்டு சிறப்பித்திருந்தனர்.
இறுதியாக மாணவர் தேர்ச்சி அறிக்கைகளும் அதிபர் தலைமையில் கோட்டக்கல்வி அதிகாரியின் முன்னிலையில் வழங்கி வைக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.