வந்தாறுமூலை பகுதியில் விபத்து –தீயில் கருகி உயிரிழந்த மூன்று இளைஞர்கள்

மட்டக்களப்பு ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வந்தாறுமூலை பகுதியில் இடம்பெற்ற விபத்தில் மூவர் உயிரிழந்துள்ளதுடன், மூவர் காயமடைந்துள்ளனர்.

இரண்டு மோட்டார் சைக்கிள்கள் இன்று(வெள்ளிக்கிழமை) இரவு ஒன்றுடன் ஒன்று மோதிக் கொண்டதனாலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தின் போது ஏற்பட்ட தீப்பரவலில் சிக்குண்டே மூவரும் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன்போது அப்பகுதியில் நின்ற மூவர் தீக்காயங்களுக்குள்ளான நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.