வாழைச்சேனை காகித ஆலையை ஆரம்பிக்க பிரதமரே தடைகளை ஏற்படுத்துகின்றார் –யோகேஸ்வரன் எம்.பி.குற்றச்சாட்டு

வாழைச்சேனை கடதாசி ஆலையை புனரமைப்பதற்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்கவே தடைகளை ஏற்படுத்துகின்றார்.சிங்கள மக்கள் மட்டுமே வாழவேண்டும்,தமிழர்களை மழுங்கடிக்கவேண்டும் என அவர் கருதுகின்றார் என மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் தெரிவித்தார்.

கிழக்கு அபிவிருத்தி செயலணியினால் மட்டக்களப்பு மாவட்டத்தில் மேற்கொள்ளப்படவேண்டிய அபிவிருத்தி திட்டங்கள் குறித்து ஆராயும் விசேட கூட்டம் இன்று திங்கட்கிழமை மட்டக்களப்பு மாவட்;ட செயலகத்தில் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே பாராளுமன்ற உறுப்பினர் இதனை தெரிவித்தார்.இதன்போது கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர்,
வாழைச்சேனை கடதாசி ஆலை சிறப்பாக இயங்கிவந்தது.1956ஆம் ஆண்டில் இருந்து விடுதலைப்புலிகள் காலம் வரையில் சிறப்பாக இயங்கிவந்தது.தேசிய வர்த்தக விருதும் அன்றைய காலத்தில்பெற்றுக்கொண்டது. அக்காலத்தில் வயிக்கல் மூலம் மட்டுமல்லாமல் கழிவு கடதாசிகள்கொண்டும் உற்பத்திகள் நடைபெற்றன.
ஆனால் இன்று கழிவுக்கடதாசிகள் இலங்கையில் இருந்து இந்தியாவுக்கு ஏற்றுமதிசெய்யப்படுகின்றது.அந்;த கடதாசி கழிவுகளை இங்கு பயன்படுத்தமுடியும்.இதன்மூலம் பல உற்பத்திகளை செய்யமுடியும்.அங்கு பயிற்றப்பட்ட சிறந்த தொழிலாளர்கள் இருக்கின்றார்கள் பல்வேறு உற்பத்திகளை செய்யமுடியும்.
வாழைச்சேனை கடிதாசி ஆலை தொடர்பில் இலங்கை அரசாங்கம் உரிய கவனம் செலுத்தவில்லை.கடந்த காலத்தில் வாழைச்சேனை கடிதாசி ஆலையில் பெறப்பட்ட வருமானங்களைக்கொண்டு எம்பிலியப்பிட்டிலில் தொழிற்சாலையொன்றை அமைத்தார்கள்.அது நட்டத்தில் இயங்க ஆரம்பித்தபோது உடனடியாக அவுஸ்ரேலிய அரசாங்கத்தின் உதவியுடன் புதிய திட்டத்தினை உருவாக்கி நடாத்திவந்தனர்.
அதேபோன்று வாழைச்சேனை கடிதாசி ஆலையின் வருமானத்தினைக்கொண்டு கொழும்பு யூனியன் பிளேசில் தலைமைக்காரியாலயம் ஒன்றை அமைத்தனர்.சில காலத்தில் அதனை விற்பனைசெய்தனர்.அந்தவேளையில் வாழைச்சேனை கடிதாசி ஆலை தலைவருக்கு கார் ஒன்றை வாங்கிக்கொடுத்து அதனை அப்படியே அபகரித்தனர்.அதில் ஒரு சிறு தொகைகூட வாழைச்சேனை கடிதாசி ஆலைக்கு வழங்கப்படவில்லை.
வாழைச்சேனை கடிதாசி ஆலையில் 3000க்கும் மேற்பட்டவர்கள் கடமையாற்றினர்.அந்தவேளையில் அங்கு வேலைசெய்தவர்களுக்கு சிறந்த கொடுப்பனவுகள் வழங்கப்பட்டன.பல்வேறு ஊக்குவிப்பு கொடுப்பனவுகளும் வழங்கப்பட்டன.பல குடும்பங்களை வாழைச்சேனை கடிதாசி ஆலையினால் வாழ்க்கையினை நடாத்தியது.அந்த தொழிற்சாலை மூடப்பட்டமையினால் இன்றும் அதன் தொழிலாளர்கள் வேதனையுடன் உள்ளனர்.
வாழைச்சேனை கடிதாசி ஆலையினை மீண்டும் இயங்குவதற்காக நாங்கள் பல முயற்சிகளை மேற்கொண்டோம்.சீனக்காரர்கள் வந்தார்கள் தலைவர் சம்பந்தர் ஐயாவுடன் கதைத்து ஏற்பாடுகளை மேற்கொண்டு இறுதிக்கட்டம் எட்டுப்போதும் வடகிழக்கில் சீனாவினை அனுமதிக்கமுடியாது என பிரதமர் ரணில் கூறினார்.அந்த திட்டமும் போனது.அதன் பின்னர் கொரியாவை சேர்ந்தவர்கள் வந்து தொழிற்சாலையினை முழுமையாக புனரமைத்து மீள இயங்கச்செய்வதாக தெரிவித்ததை தொடர்ந்து அது தொடர்பான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டது.அதற்கும் பிரதமர் குறித்த தொழிற்சாலையில் தொழில்நுட்ப பூங்கா செய்யவேண்டும், சுற்றுலாத்துறையினை அபிவிருத்திசெய்யவேண்டும் என்று கூறி வாழைச்சேனை கடிதாசி ஆலைக்கு வந்த 20மில்லியன் டொலர்களையும் எம்பிலியப்பிட்டிக்கு கொண்டுசென்று அதனை அபிவிருத்திசெய்தார்.நாங்கள் முயற்சிகளை மேற்கொண்டு கொண்டுவந்த நிதியை எம்பிலியப்பிட்டிக்கு பிரதமர் கொண்டுசென்றார்.
தற்போது அபுதாபியில் இருந்து தமிழர்களின் ஒத்துழைப்புடன் 20000மில்லியன் டொலர் ஒழுங்குசெய்யப்படுகின்றது.இந்தியாவில் இருந்தும் அதற்கான பணத்தினை வழங்குவதற்கு தயாராகவுள்ளனர். வாழைச்சேனை கடிதாசி ஆலையினை புனரமைத்து மீள இயங்கச்செய்வதற்கு தேவையான நிதியுதவிகளை வழங்க பலர் தயாராகவுள்ளனர்.ஆனால் அதற்கான அனுமதியை வழங்குவதற்கு தயங்குகின்றனர்.காரணம் எம்பிலிப்பிட்டிய தொழிற்சாலையினை விரிவுபடுத்துவதற்காக இதனை மூடபார்க்கின்றனர்.இதனை கடந்த ஜனாதிபதி செயலணியிலும் சுட்டிக்காட்டியுள்ளேன்.
பிரதமர் ரணில் விக்ரமசிங்கவே இதற்கான தடைகளை ஏற்படுத்துகின்றார்.சிங்கள மக்கள் மட்டுமே வாழவேண்டும்,தமிழர்களை மழுங்கடிக்கவேண்டும் என அவர் கருதுகின்றார்.
தொழில்நுட்ப பூங்காவோ,சுற்றுலாத்துறைக்கோ வாழைச்சேனை கடிதாசி ஆலை பொருத்தம் இல்லையென ஆய்வுகள் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது. மூன்று இனங்களும் தொழிலாற்றிய தொழிற்சாலை.
அதனை இயங்கச்செய்வதற்கான ஒழுங்கமைப்பினை மேற்கொள்வதில் பிரதமர் தயக்கம் காட்டுகின்றார்.அதனை மீண்டும் இயங்கச்செய்வதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் நாங்கள் மேற்கொண்டுள்ளோம்.நிதியும் தயாராகவுள்ளது.ஜனாதிபதி அதற்கான அனுமதியை வழங்கியுள்ளார்.பிரதமர் அதற்கான அனுமதியை வழங்கவில்லை.ஜனாதிபதி செயலணிக்கு இதனை நாங்கள் கொண்டுசென்றபோது அதனை உடனடியாக ஆரம்பிக்கவேண்டும் என ஜனாதிபதி எங்களுக்கு ஆதரவு தெரிவித்தார்.
ஆனால் அமைச்சர் ரிசாத் பதீயூதின் எங்களுடன் கலந்துரையாடாமல் அதற்கு ஒரு தவிசாளரை நியமித்துள்ளார்.எங்களுடன் கலந்துரையாடியே அதற்கு தவிசாளர் நியமிக்கப்படவேண்டும்.
எதிர்காலத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் முன்னெடுக்கப்படவுள் விசேட அபிவிருத்தி திட்டம் தொடர்பில் அனைவருடனும் கலந்துரையாடவுள்ளோம். பிரதேசசபை தவிசாளர்கள்,பிரதேச செயலாளர்களுடன் கலந்துரையாடி கீழ் மட்டங்களில் இருந்து திட்டங்களை முன்னெடுக்கவுள்ளோம்.தொண்டர் நிறுவனங்கள் எல்லாம் அடிமட்டத்தில் இருந்து திட்டங்களை மேற்கொண்டதன் காரணமாகவே அவை வெற்றிபெற்றன.அதன்காரணமாகவே அடிமட்டத்தில் இருந்து திட்டங்களை முன்னெடுக்கவுள்ளோம்.
மட்டக்களப்பு மாவட்டத்திற்கு பொருத்தமான திட்டங்களை முன்னெடுப்பது குறித்தே நாங்கள் கூடுதல் கவனம் செலுத்தவுள்ளோம்.கடந்த காலத்தில் மட்டக்களப்பில் அர்ஜுன் அலோசியஸ{க்கு பிரதமர் சிபாரிசு வழங்கிய இங்கு எதனோல் தொழிற்சாலை வந்தது.இது மாவட்டத்திற்கு பொருத்தமற்றதாகும்.
மக்களினால் ஏற்றுக்கொள்ளப்படும்,மாவட்டத்திற்கு பொருத்தமான திட்டங்களுக்கு மட்டும் அனுமதியளிக்கப்படும்,பொருத்தமற்ற திட்டங்களை,மக்களால் ஏற்றுக்கொள்ளப்படாத திட்டங்களை நடைமுறைப்படுத்த அனுமதிக்கமாட்டோம் என்றார்.