களுதாவளையில் நீர்நிலையில் இருந்து ஆணின் சடலம் மீட்பு

மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட களுதாவளையில் உள்ள நீர்நிலையில் இருந்து ஆண் ஒருவரின் சடலம் நேற்று மாலை மீட்கப்பட்டுள்ளது.
களுதாவளை குருகுலம் வீதியின் மூன்றாம் குறுக்கு வீதியில் உள்ள நீர்நிலையொன்றில் இருந்தே இந்த சடலம் கண்டுபிடிக்கப்பட்டது.

குறித்த சடலம் 50 வயதுடைய தேற்றாத்தீவு வைத்தியர் வீதியை சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தையான ஸ்கந்தராஜா என்பவருடைய சடலம் என உறவினர்களினால் அடையாளம் காணப்பட்டுள்ளதாக களுவாஞ்சிகுடி பொலிஸார் தெரிவித்தனர்.

இவர் மூன்று தினங்களுக்கு முன்னர் காணாமல் போன நிலையில் நேற்று மாலை சடலமாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.

குறித்த சடலம் தொடர்பான மரண விசாரணைகள் இன்று காலை நடைபெற்றதை தொடர்ந்து பிரேத பரிசோதனைகளுக்காக சடலம் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளது.