கல்லடி கடற்கரை மணலில் காணப்பட்ட அதிசயம்

ஒரு செய்தியை மக்களுக்கு சொல்லும் வகையிலான கலையம்சங்கள் பல்வேறு வகைகளில் கையாளப்படுகின்றது.கடற்கரை மண்ணால் ஓவியங்கள் மூலம் பெண்களுக்கு எதிரான வன்முறைகளற்ற வாழ்வினை கொண்டாடும் வகையிலான மணல் சிற்ப கண்காட்சியொன்று கல்லடி கடற்கரையில் நடைபெற்றது.

கிழக்கு பல்கலைக்கழகத்தின் சுவாமி விபுலானந்தா அழகியல் கற்கைகள் நிறுவக மாணவர்களினால் உருவாக்கப்பட்ட இந்த மணல் சிற்ப கண்காட்சி நேற்று(14) மாலை நடைபெற்றது.

காண்பவர்களை மிகவும் கவர்ந்த வகையிலும் சிந்திக்கவைக்ககூடிய வகையிலும் இந்த மணல் சிற்ப கண்காட்சி நடைபெற்றது.

நூறு கோடி மக்களின் எழுச்சி 2019 என்னும் தலைப்பில் பெண்களுக்கு எதிரான வன்முறை தொடர்பில் விழிப்புணர்வூட்டும் வகையில் இந்த காட்சி ஏற்படுத்தப்பட்டிருந்தது.

கிழக்கு பல்கலைக்கழகத்தின் சுவாமி விபுலானந்தா அழகியல் கற்கைகள் நிறுவகத்தின் கட்புலக்கலைதுறை விரிவுரையாளர் திருமதி ரினுஜா சிவசங்கரின் நெறிப்படுத்தலின் கீழ் கட்புலக்கலைதுறை மாணவர்களினால் இந்த கண்காட்சி உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த கண்காட்சியை பெருமளவான மக்கள் ஆவலுடன் கண்டுகழித்ததை காணமுடிந்தது.