பிள்ளையானை பார்வையிட்ட முக்கியஸ்தர்கள்

மட்டக்களப்பு சிறைச்சாலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான சிவநேசதுரை சந்திரகாந்தனை பொதுஜன பெரமுன பாராளுமன்ற உறுப்பினர்கள் சென்று சந்தித்துள்ளனர்.

இன்று மட்டக்களப்புக்கு விஜயம் மேற்கொண்டுள்ள பொதுஜன பெரமுனவின் தேசிய பிரதி அமைப்பாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான எஸ்.அமரசிங்க,பாராளுமன்ற உறுப்பினர்களான ரொசான் ரணசிங்க,நிமால் லங்கஸா ஆகியோர் இன்று சிறைச்சாலைக்கும் சென்று முன்னாள் முதலமைச்சரை பார்வையிட்டனர்.

இதன்போது தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான சிவநேசதுரை சந்திரகாந்தனின் நலம் விசாரித்த அவர்கள் கலந்துரையாடல்களையும் நடாத்தியுள்ளனர்.

இந்த சந்திப்பின்போது தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் பொதுச்செயலாளர் பூ.பிரசாந்தனும் இணைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.