டெலோவின் மட்டக்களப்பு மாவட்டத்திற்கான இளைஞர்கள் அமைப்பு

தமிழீழ விடுதலை இயக்கத்தின் (டெலோ)மட்டக்களப்பு மாவட்ட இளைஞர் அணி உருவாக்கப்பட்டு அதற்கான நிர்வாக தேர்வும் செய்யப்பட்டுள்ளதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினருமான கோவிந்தன் கருணாகரம் தெரிவித்தார்.

தனது தலைமையில் மட்டக்களப்பு,ஆனைப்பந்தியில் உள்ள தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைமைகாரியாலத்தில் அண்மையில் நடைபெற்ற கூட்டத்தில் இந்த நிர்வாகம் தெரிவுசெய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இந்த கூட்டத்தில் தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவருமான செல்வம் அடைக்கலநாதன்,முன்னாள் வடமாகாணசபை உறுப்பினரும் கட்சியின் தவிசாளருமான எம்.கே.சிவாஜிலிங்கம்,முன்னாள் கிழக்கு மாகாண பிரதி தவிசாளர் பிரச்சன்னா இந்திரகுமார்,தமிழீழ விடுதலை இயக்கத்தின் இளைஞர் அணி தலைவரும் முன்னாள் வடமாகாணசபை உறுப்பினருமான சபா.குகதாசன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இதன்போது தமிழீழ விடுதலை இயக்கத்தின் மட்டக்களப்பு மாவட்டத்திற்கான செயலாளராக சட்டத்தரணி ஆர்.கமலதாசன் தெரிவுசெய்யப்பட்டதுடன் உப செயலாளராக எஸ்.உமேஸ்காந்த் தெரிவுசெய்யப்பட்டார்.

அத்துடன் தொகுதி மற்றும் பிரதேச செயலக ரீதியான செயலாளர்களும் இதன்போது தெரிவுசெய்யப்பட்டனர்.

இதனடிப்படையில் தொகுதியடிப்படையில் கல்குடா தொகுதி செயலாளராக ரி.கோகிலாசன்,மட்டக்களப்பு தொகுதி செயலாளராக மட்டக்களப்பு மாநகரசபை உறுப்பினர் பு.ரூபராஜ்,பட்டிருப்பு தொகுதி செயலாளராக சு.விதுஸன் ஆகியோர் தெரிவுசெய்யப்பட்டனர்.

அத்துடன் பிரதேச செயலக ரீதியிலும் செயலாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளதாகவும் அதனடிப்படையில் வாகரை பிரதேசத்திற்கு வி.சரஞ்சனும் வாழைச்சேனை பிரதேசத்தற்கு வ.வன்னியசேகரமும் செங்கலடி பிரதேசத்திற்கு சு.நிதர்சன் தெரிவுசெய்யப்பட்டதுடன் மண்முனை வடக்கு பிரதேச செயலக பிரிவுக்கு கே.கேதீஸ் தெரிவுசெய்யப்பட்டதுடன் மண்முனைப்பற்று பிரதேசத்திற்கு த.ஜெகநாதன்,களுவாஞ்சிகுடி யோ.ரமணன்,போரதீவுப்பற்று சு.ரஞ்சன்,பட்டிப்பளைக்கு க.புலேந்திரகுமார்,வவுணதீவு பிரதேசத்திற்கு மு.நவனேந்திரன் ஆகியோர் தெரிவுசெய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.