கல்லடி கடற்கரையில் வயறினால் இறுக்கப்பட்ட நிலையில் சடலம் மீட்பு

மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கல்லடி டச்பார் கடற்கரையினை அண்டிய பகுதியில் ஆண் ஒருவரின் சடலம் இன்று காலை (15) மீட்கப்பட்டுள்ளது.

கல்லடி வேலூர் 8 ஆம் குறுக்கு தெருவில் வசித்து வந்த ஒரு பிள்ளையின் தந்தையான ராமநாதப்பிள்ளை - 50 என்பவரே வயரினால் கட்டப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

சைக்கிளில் இருந்தவாறு மரமொறில் இருந்து கழுத்து பகுதியில் வயர் ஒன்றினால் குறித்த நபர் இறுக்கப்பட்டிருந்த நிலையிலேயே சடலம் மீட்கப்பட்டுள்ளது.

பிரேத பரிசோதனைகளுக்காக சடலம் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டதுடன் , மேலதிக விசாரனைகளை காத்தான்குடி பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.