மாமாங்கேஸ்வரர் ஆலய ஆடி அமாவாசை தீர்த்த உற்சவம் (நேரலை)

மெதடிஸ்த மத்திய கல்லூரியின் வருடாந்த இல்ல விளையாட்டு போட்டி –ஓல்ட் சம்பியன்

மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரியின் வருடாந்த இல்ல விளையாட்டுப்போட்டியில் ஓல்ட் இல்லம் 298 புள்ளிகளைப்பெற்று இந்த ஆண்டுக்கான சம்பியனாக தெரிவுசெய்யப்பட்டுள்ளது.

மெதடிஸ்த மத்திய கல்லூரியின் வருடாந்த இல்ல விளையாட்டுப்போட்டி இன்று மாலை மட்டக்களப்பு வெபர் விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.

பாடசாலையின் அதிபர் ஆர்.பாஸ்கர் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் எம்.உதயகுமார் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.

சிறப்பு அதிதிகளாக பிரதிக்கல்விப்பணிப்பாளர் சஜீவன்,உடற்கல்வி உதவி பணிப்பாளர் கே.லவகுமார்,மண்முனை வடக்கு கோட்டக்கல்வி பணிப்பாளர் கே.அருள்பிரகாசம் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

ஓல்ட் இல்லம்,ஹொல்டொம் இல்லம்,சோமநாதர் இல்லம்,ஹார்ட்மன் இல்லம் என நான்கு இல்லங்கள் இன்றைய இல்ல விளையாட்டு நிகழ்வில் கலந்துகொண்டன.

இதன்போது ஒலிம்பிக் தீபம் ஏற்றப்பட்டு மாணவர்களின் அணி வகுப்பு மரியாதையினை தொடர்ந்து விளையாட்டு நிகழ்வுகள் நடைபெற்றன.

விளையாட்டு நிகழ்வுகளை தொடர்ந்து மாணவர்கள் கண்கவர் உடற்பயிற்சி கண்காட்சி சிறப்பாக நடைபெற்றதை தொடர்ந்து வெற்றிபெற்ற மாணவர்களுக்கான பரிசளிப்பு நடைபெற்றது.

ஓல்ட் இல்லம் 298 புள்ளிகள்,ஹொல்டொம் இல்லம் 285 புள்ளிகள், சோமநாதர் இல்லம் 262 புள்ளிகள்,ஹார்ட்மன் இல்லம் 260 புள்ளிகளையும் பெற்றுக்கொண்டன.