போரதீவுப்பற்று பிரதேச செயலகத்தில் கிராம சக்தி கிராம எழுச்சி வேலைத் திட்டம்


(எஸ்.நவா)
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எண்ணத்தில் உருவான கிராம சக்தி கிராம எழுச்சித்திட்டத்தின் கீழ் பிரதேச செயலகத்தில் கிராமங்கள் தெரிவு செய்யப்பட்டு கிராம சக்தி அபிவிருத்தி திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இதற்கு அமைய பன்னிரென்டு கிராமங்கள் தெரிவு செய்யப்பட்டு இன்று (21) போரதீவுப்பற்று பிரதேச செயலகத்தின் விவேகானந்தபுரம் கிராமத்தில் நான்காவது திட்டமான போதைப்பொருள் தடுப்பு நிகழ்சிதிட்டம்  பிரதேச செயலகத்தின் பிரதேச செயலாளர் ஆர். ராகுலநாயகி அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.

இதன்மூலம் இப்பிரதேசத்தில் வேரூன்றி காணப்படுகின்ற போதைப்பொருள்இ சூதாட்ட நிலையங்களை ஒழித்தல்இ மற்றும் போதைப்பொருள் தடுப்பு நிகழ்சி திட்டங்களை நடைமுறைப்படுத்தல்இ அதற்கான துண்டுப்பிரசுரங்கள்இ பதாதைகள்இ சுவரொட்டிகள்இ வீதி நாடகங்கள் மூலமாக மக்களை தெளிவுபடுத்தல் போன்ற விடயங்கள் இடம்பெற்றிருந்தது

இதன்போது மட்டக்களப்பு கதிரவன்; பட்டிமன்றம் குழுவினர்கள் போதைப்பொருள் பாவனைக்கு விற்பனையாளரா? பாவனையாளரா காரணம் எனும் தலைப்பிலான இரண்டு அணியினருக்குமான பட்டிமன்றம் இடபெற்றதும் குறிப்பிடத்தக்கது