கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரர் ஆலய தேரோட்டம் (நேரலை)

மட்டக்களப்பு பல்நோக்குக் கூட்டுறவுச் சங்கத்தின் வருடாந்த ஒன்றுகூடலும், புதிய நிருவாகத் தெரிவும்...
மட்டக்களப்பு பல்நோக்குக் கூட்டுறவுச் சங்கத்தின் வருடாந்த ஒன்றுகூடலும், புதிய நிருவாகத் தெரிவும்...

மட்டக்களப்பு பல்நோக்குக் கூட்டுறவுச் சங்கத்தின் வருடாந்த ஒன்றுகூடலும், புதிய நிருவாகத் தெரிவும் அண்மையில்  கூட்டுறவுச் சங்கத்தின் தலைவர் கனகசுந்தரம் தலைமையில் மட்டக்களப்பு கூட்டுறவு மண்டபத்தில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் கூட்டுறவுத் திணைக்களத்தின் அதிகாரிகள், பல்நோக்குக் கூட்டுறவுச் சங்க கிளைகளின் பேராளர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.

இதன் போது கூட்டுறவுச் சங்கத்திற்கான புதிய நிருவாகத் தெரிவு தொடர்பில் அதிகாரிகளினால் விளக்கம் அளிக்கப்பட்டதுடன் வாக்கெடுப்பு மூலம் புதிய நிருவாகத்திற்கான உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டனர்.

இதில் 18 தொடக்கம் 35 வயதிற்குட்பட்டோர் சார்பில் இருவரும், பெண்கள் சார்பில் இருவரும் உட்பட மேலதிகமாக ஐவரும் தெரிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.