திருகோணமலை மாவட்ட உதவிப்பணிப்பாளராக திரு ரவிக்குமார் நியமனம்.தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் தலைமைக்காரியாலயம் மஹரமவில் இன்று நடைபெற்ற நிகழ்வின் போதே அதன் தலைவர் பணிப்பாளர் நாயகம் சட்டத்தரணி எறந்த வெலியங்கே அவர்களினால் திருகோணமலை மாவட்ட தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் உதவிப்பணிப்பாளராக திரு எஸ், ரவிக்குமார் அவர்களுக்கு குறித்த நியமனம் வழங்கிவைக்கப்பட்டுள்ளது.


தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் மன்னார், மற்றும்  திருகோணமலை மாவட்ட காரியாலயங்களில் மாவட்ட இளைஞர் சேவை அதிகாரியாக கடமைபுரிந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.