புளியந்தீவு புனித மரியாள் பேராலயத்தில் புதுவருட ஆராதனை

2019ஆம் ஆண்டினை வரவேற்கும் வகையில் நாடளாவிய ரீதியில் உள்ள தேவாலங்களில் நேற்று நள்ளிரவு ஆராதனைகள் மற்றும் திருப்பலிகள் ஒப்புக்கொடுக்கப்பட்டன.

பிறந்திருக்கும் ஆண்டு புதிய நம்பிக்கையினை வழங்கவேண்டும் என்ற அடிப்படையில் மட்டக்களப்பு புளியந்தீவு புனித மரியாள் பேராலயத்தில் புதுவருட ஆராதனைகள் நேற்று நள்ளிரவு நடைபெற்றன.

மட்டக்களப்பு மறை மாவட்ட ஆயர் பொன்னையா ஜோசப்தலைமையில் நடைபெற்ற இந்த ஆராதனையில் ஆலயத்தின் பங்குத்தந்தை அன்னதாஸ் அடிகளார், மறைக்கோட்ட முதல்வர் ஏ.ஜேசுதாசன் அடிகளார் பங்குபற்றுதலுடன் விசேட திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டது.

புதிய ஆண்டு அனைவருக்கும் புதிய நம்பிக்கையினை கொடுக்கவேண்டும்,கடந்த காலத்தில் இருந்துவந்த துன்ப துயரங்கள் நீங்கி நல்வாழ்வினை ஏற்படுத்த பிரார்த்தனைகள் நடைபெற்றன.

அத்துடன் புதிய ஆண்டில் நாட்டில் சாந்தியும் சமாதானம் ஏற்பட்டு நீடித்த அமைதி நிலவவேண்டும் என்று பிரார்த்தனையும் செய்யப்பட்டது.

இந்த விசேட திருப்பலி பூஜையில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் எம்.உதயகுமார் உட்பட பெருமளவான பக்தர்களும் கலந்துகொண்டு வழிபாடுகளை மேற்கொண்டதுடன் விசேட ஆராதனைகளும் நடைபெற்றன.