மாவட்ட செயலகத்தில் சத்தியப்பிரமாண நிகழ்வு

புதிய ஆண்டில் அரசாங்க உத்தியோகத்தர்கள் கடமைக்கான சத்தியப்பிரமாணம் செய்யும் நிகழ்வு இன்று காலை சகல திணைக்களங்கள்,அரச நிறுவனங்களில் நடைபெற்றது.

மட்டக்களப்பு மாவட்ட பிரதான சத்தியப்பிரமாண நிகழ்வு மட்;டக்களப்பு மாவட்ட செயலகத்தில் மாவட்ட அரசாங்க அதிபர் எம்.உதயகுமார் தலைமையில் நடைபெற்றது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் போதைப்பொருள் அற்ற நாட்டையும் சமூக விழுமியங்களையும் பொருளாதார வளம்கொண்ட சமூகத்தினையும் கட்டியெழுப்புவதற்கான வேலைத்திட்டத்தினை வலுவூட்டுவதற்காக அரச உத்தியோகத்தர்களின் அர்ப்பணிப்புமிக்க சேவையினை வழங்கும் வகையில் இன்றைய சத்தியப்பிரமான நிகழ்வு நடைபெற்றது.

இதன்போது தேசிய கொடியேற்றப்பட்டு நாட்டில் உயிர் நீர்த்த பாதுகாப்பு தரப்பினர் மற்றும் அரச உத்தியோகத்தர்களுக்காக இரண்டு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.

அதனைத்தொடர்ந்து 2019ஆம் ஆண்டுக்கான அரச உத்தியோகத்தர்களுக்கான பிரகடனம் வாசிக்கப்பட்டு அரச உத்தியோகத்தர்கள் சத்தியப்பிரமாணம் செய்யும் நிகழ்வு நடைபெற்றது.

இந்த நிகழ்வில் மேலதி அரசாங்க அதிபர்கள்,உதவி அரசாங்க அதிபர்கள்,திணைக்களங்களின் தலைவர்கள்,உத்தியோகத்தர்கள் என பலர் கலந்துகொண்டனர்.

இதன்போது கடந்த ஆண்டு சிறப்பாக செயற்பட்ட உத்தியோகத்தர்களுக்கு நற்சான்றிதழ்களும் வழங்கிவைக்கப்பட்டன.