மாதர் அபிவிருத்தி பயிற்சி நிலைய மாணவியர்களின் கண்காட்சியும் விற்பனையும்

மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலகத்தினால் ஒழுங்கு செய்து நடாத்தப்பட்ட ஒரு வருட டிப்ளேமா கற்கை நெறியை பூர்த்தி செய்த மாதர் அபிவிருத்தி பயிற்சி நிலைய மாணவியர்களின் கண்காட்சியும் விற்பனையும் நேற்று(28.12.2018) வெள்ளிக்கிழமை காலை 9.30 மணியளவில் களுவாஞ்சிகுடி வடக்கு பல்தேவை கட்டடத்தில் கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர் கா.அ.யூ.இன்பராஜா தலைமையில் நடைபெற்றது.

இவ் மாணவியர்களின் கண்காட்சியும் விற்பனையும் நிகழ்விற்கு பிரமத அதிதியாக மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலகத்தின் பிரதேச செயலாளர் சிவப்பிரியா வில்வரத்தினம் கலந்து கொண்டு கண்காட்சியும் விற்பனையும் ஆரம்பித்து வைத்தார்.