மட்டக்களப்பில் காணி விடுவிப்பு – வெலிக்கந்தைக்குள் உள்வாங்கப்பட்ட மட்டக்களப்பு காணி?

மட்டகளப்பு மாவட்டத்தில் படையினர் வசமுள்ள ஒரு தொகை காணிகள் இன்று பிற்பகல் உரியவர்களிடம் வழங்கும் நிகழ்வு மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.

ஜனாதிபதியின் வடகிழக்கு மாகாண அபிவிருத்தி செயலணியில் எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு அமைவாக இந்த காணிகள் விடுவிக்கப்பட்டுள்ளன.

இதனை உத்தியோகபூர்வமாக உரியவர்களிடம் வழங்கும் நிகழ்வு மாவட்ட செயலகத்தில் கிழக்கு மாகாண ஆளுனர் ரோகித போகொல்லாகம தலைமையில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் மட்டக்களப்பு மாவாட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன்,மாநகர ஆணையாளர் தி.சரவணபவன்,மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி சுதர்சினி சிறிக்காந்தா, கிழக்கு மாகாண இராணுவத்தளபதி மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர,23வது படைப்பிரிவின் பிரிக்கேடியர் கபில உதுலகெம,231 படைப்பிரிவின் கட்டளை அதிகாரி கேணல் மிகுந்து பெரேரா உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இதனடிப்படையில் இந்த ஆண்டு 31ஆம் திகதிக்கு இடையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் படையினர் வசமுள்ள அரச,தனியார் காணிகள் விடுவிக்கப்படும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வழங்கி உறுதிமொழிகளின் விடுவிக்கப்பட்டுள்ளன.

மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செலயதக்திற்குட்பட்ட ஓந்தாச்சிமடத்தில் 0.5ஏக்கர் படையினரின் முகாம் இருந்;த காணி,பட்டிப்பளை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கொக்கட்டிச்சோலை0.75 ஏக்கர் காணி,மண்முனைப்பற்று பிரதேச செயலகத்திற்குட்பட்ட கிரான்குளத்தில் 2.25ஏக்கர் காணி, வாகரை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட 05 ஏக்கர் காணி மகாவலி அபிவிருத்தி திட்டத்திற்கு என வெலிக்கந்தை பிரதேச செயலகத்திற்குள் உள்வாங்கப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு மாவட்டத்திற்குரிய 03.5 ஏக்கர் காணிகளே விடுவிக்கப்பட்ட நிலையில் தமது காணிகள் மகாவலி அபிவிருத்தி வலயத்திற்குள் உள்வாங்கப்பட்டு வழங்கப்பட்டுள்ளதாக வாகரை மக்கள் இங்கு அதிர்ப்தி தெரிவித்தனர்.

வாகரை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட தோண்தாண்டமடு பகுதி மக்களின் வாழ்வாதார காணிகள் இவ்வாறு மகாவலி அபிவிருத்தி திட்டத்திற்குள் உள்வாங்கப்பட்டுள்ளதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.