மட்டக்களப்பு வர்த்தக சங்கத்தினால் நிவாரணங்கள் வழங்கிவைப்பு

வடமாகாணத்தின் முல்லைதீவு மற்றும் கிளிநொச்சி பகுதிகளில் வெள்ள அனர்த்ததினால் பாதிக்கப்பட்ட மக்களு;க்கு மட்டக்களப்பு வர்த்தக சங்கத்தினால் ஒரு தொகை நிவாரணப்பொருட்கள் வழங்கிவைக்கப்பட்டன.

மட்டக்களப்பு வெபர் மைதானத்தில் மட்டக்களப்பு மாவட்ட செயலகம் மற்றும் மட்டக்களப்பு மாநகரசபை இணைந்து நடாத்தும் நிவாரண சேகரிப்பு பிரதான நிலையத்தில் வைத்து இவை வழங்கிவைக்கப்பட்டன.

மட்டக்களப்பு வர்த்தக சங்கத்தலைவர் எஸ்.செல்வராஜா தலைமையிலான வர்த்தக குழுவினர் இந்த நிவாரணப்பொருட்களை மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் எம்.உதயகுமார்,மட்டக்களப்பு மாநகரசபை முதல்வர் தி.சரவணபவன் ஆகியோரிடம் வழங்கிவைத்தனர்.

மட்டக்களப்பு வர்த்தக சங்க உறுப்பினர்களின் ஒத்துழைப்புடன் சுமார் 12 இலட்சம் ரூபா பெறுமதியான நிவாரணப்பொருட்கள் வழங்கிவைக்கப்பட்டன.

அரிசி,சீனி,சிறுவர்களுக்கான பால்மா,கற்றல் உபகரணங்கள் உட்பட பெருமளவான உணவுப்பொருட்கள் இதன்போது வழங்கிவைக்கப்பட்டன.ஷ
இந்த நிகழ்வில் மட்டக்களப்பு மாநகரசபை பிரதி முதல்வர் க.சத்தியசீலன்,ஆணையாளர் க.சித்திரவேல் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இதன்போது வர்த்தக சங்க பிரதிநிதிகள்,மாநகரசபை உறுப்பினர்கள் உத்தியோகத்தர்கள் என பெருமளவிலானோர் கலந்துகொண்டனர்.