உன்னிச்சை பகுதியில் வறிய மாணவர்களுக்கு பிரதேசசபை உறுப்பினர் உதவி

மட்டக்களப்பு மாவட்டத்தின் வவுணதீவு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட உன்னிச்சை பகுதியில் மிகவும் வறுமை நிலையில் உள்ள மாணவர்களுக்கு பாடசாலை கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு இன்று பகல் நடைபெற்றது.

மட்டக்களப்பு மாவட்டத்தின் மிகவும் வறிய பிரதேசங்களில் ஒன்றாக கருதப்படும் பகுதியாகவும் பாடசாலை மாணவர்கள் இடைவிலகள் அதிகமான பகுதியாகவும் காணப்படுகின்றது.

வறுமையின் நிலை காரணமாகவே இவ்வாறு இடைவிலகல் அதிகரித்திருக்கும் நிலையில் அவற்றினை மாற்றி சிறந்த கல்வி சமூகத்தினை உருவாக்கும் நோக்கில் இவ்வாறான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.

இதன்கீழ் மண்முனை மேற்கு வவுணதீவு பிரதேசசபை உறுப்பினர் எஸ்.குகநாதனின் சொந்த நிதியில் இருந்து 100 மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் இன்று வழங்கிவைக்கப்பட்டன.

இரண்டு பகுதிகளில் இந்த உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு நடைபெற்றதுடன் அவர்களுக்கான கல்வி தொடர்பான முக்கியத்துவம் தொடர்பில் விளக்கமளிக்கப்பட்டன.

உன்னிச்சை கலைமகள் அபிவிருத்தி கூட்டுறவு சங்கத்தின் ஏற்பாட்டில் இது தொடர்பான நிகழ்வு இன்று பிற்பகல் நடைபெற்றது.

இதன்போது வவுணதீவு பிரதேசசபை உறுப்பினர் எஸ்.குகநாதன் கலந்துகொண்டு கற்றல் உபகரணங்களை மாணவர்களுக்கு வழங்கிவைத்தார்.