பெரியகல்லாறில் உணர்வுபூர்வமாக நடைபெற்ற சுனாமி ஞாபகார்த்த நிகழ்வு

மட்டக்களப்பு மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலகத்திற்குட்பட்ட பெரியகல்லாறில் சுனாமி ஞாபகார்த்த நினைவு தினம் உணர்வுபூர்வமாக அனுஸ்டிக்கப்பட்டுள்ளது.

இன்று காலை பெரியகல்லாறு ஸ்ரீசர்வார்த்த சித்திவிநாயகர் ஆலயத்திற்கு முன்பாக இந்த நிகழ்வு நடைபெற்றுள்ளது.

கல்லாறு மத்திய விளையாட்டுக்கழகத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த நிகழ்வில் உயிர்நீர்த்தவர்களின் நினைவாக ஈகச்சுடர் ஏற்றப்பட்டு இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.

இதன்போது பெரியகல்லாறு பகுதியில் சுனாமியின்போது உயிர்நீர்த்தவர்களின் உறவினர்கள்,கழக உறுப்பினர்கள்,பொதுமக்கள் என பெருமளவானோர் கலந்துகொண்டனர்.