மண்முனை மேற்கில் புதிய நிருவாகிகள் தெரிவு.


மண்முனை மேற்கு பிரதேசத்திற்க்கான, பிரதேச  இளைஞர் அபிவிருத்தி ஆலோசனை செயற்குழுவிற்கான புதிய நிருவாகிகள் நேற்று புதன்கிழமை (26.12.2018) தெரிவு செய்யப்பட்டனர்.

மண்முனை மேற்கு பிரதேச செயலக ஒன்றுகூடல் மண்டபத்தில் உதவி பிரதேச செயலாளர் திருமதி எஸ்.சுபா  தலைமையில் நடைபெற்ற இக் கூட்டத்தில் தலைவராக பிரதேச செயலாளர் திரு எஸ்.சுதாகர் அவர்கள் நியமிக்கப்பட்டார், உபதலைவராக உதவிபிரதேச செயலாளர் திருமதி எஸ்.சுபா அவர்களும், செயலாளராக க.சசீந்திரன் ஆகியோரும் தெரிவு செய்யப்பட்டனர்.

  செயற்குழு உறுப்பினர்களாக விளையாட்டு உத்தியோகஸ்தர் பு.ரூபராஜ் , கிராம சேவகர்களான தி.தயாநிதி , வே.ஜெகதீபன் , ம.திவ்வியா , அபிவிருத்தி உத்தியோகஸ்தர்களான யு.மயூரன், க.சங்கர், சு.இளங்கோவன்,   சமூர்த்தி அபிவிருத்தி உத்தியோகஸ்தர் சி.சுதர்சன் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டனர்.

மேலும் இக்கூட்டத்திற்கு மண்முனை மேற்கு பிரதேச செயலகத்தில் கடமை புரியும் கிராம சேவகர்களின் நிருவாக உத்தியோகஸ்தர் எம்.கோமளோஸ்வரன் அபிவிருத்தி உத்தியோகஷ்தர்கள், கிராமசேவகர்கள், சமூர்த்தி அபிவிருத்தி உத்தியோகஸ்தர்கள் என பல வெளிக்கள உத்தியோகஸ்தர்களும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.


2019ம் வருடத்தில் மண்முனை மேற்கு பிரதேசத்தில் முன்னெடுக்கப்படவுள்ள இளைஞர் அபிவிருத்தி நடவடிக்கை தொடர்பாக  மேற்பார்வை வழிகாட்டல் ஆலோசனை வழங்கல் இந்த குழுவின் பிரதான செயற்பாடாக அமையும்.