வேட்டையன் -கலக்கும் மட்டக்களப்பு கலைஞர்கள் -ஆச்சரியபட வைக்கும் நிகழ்வு

மட்டக்களப்பு மாவட்டத்தில் இருந்து முதல்முறையாக முழு நீள திரைப்படம் ஒன்று தயாரிக்கப்பட்டு வெளிவரவுள்ளது.

வேட்டையன் என்னும் பெயரில் உருவாகியுள்ள குறித்த திரைப்படத்தின் பாடல்களின் வெளியீட்டு மற்றும் திரைப்பட முன்னோட்ட நிகழ்வு ட்டக்களப்பில் நடைபெற்றது.

மட்டக்களப்பு கூழாவடி அஞ்சனா கிராண்ட் மண்டபத்தில் வேட்டையன் படக்குழுவின் ஏற்பாட்டில் நடைபெற்றது.

வேட்டையன் திரைப்படத்தின் இயக்குனர் எஸ்.என்.விஸ்ணுஜன் தலைமையில் இந்த நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது.

இந்த நிகழ்வில் திரைப்படத்தில் கடமையாற்றிய கலைஞர்கள்,இரசிகர்கள்,மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் எம்.தயாபரன் உட்பட பல்வேறு தரப்பினரும் கலந்துகொண்டனர்.

இதன்போது மட்டக்களப்பு மாவட்டத்தின் கலைத்துறையில் தனக்கென தனியிடம் கொண்ட இளம் கலைஞர்கள் மரக்கன்றுகள் வழங்கி வித்தியாசமான முறையில் கௌரவிக்கப்பட்டன.

அத்துடன் வேட்டையன் திரைப்படத்தின் பாடல்கள் ஒலிபரப்பப்பட்டதுடன் பாடல்கள் அடங்கிய இறுவெட்டும் இதன்போது வெளியிட்டு வைக்கப்பட்டது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் முதன்முறையாக உருவாகியுள்ள முழுநிள திரைப்படத்திற்கு ஆதரவு வழங்கும் வகையில் இந்த நிகழ்வுக்கு பெருமளவனோர் கலந்துகொண்டு சிறப்பித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.