வாழ்வாதார குடும்பங்களை மேம்படுத்தும் வேலைத்திட்டம்

 (படுவான்)

போரதீவுப்பற்று பிரதேச செயலகப்பிரிவிலுள்ள  2018 வாழ்வாதார குடும்பங்களை மேம்படுத்தும் வேலைத்திட்டத்தின் கீழ் பயனுகரிகளுக்கு தென்னங்கன்றுகள் கறவைப்பசுக்கள் மற்றும் கோழிக்குஞ்சுகள்; ஏனைய உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு (23) பிரதேச செயலாளர் ஆர்.இராகுலநாயகி அவர்களின் தலைமையில் நடைபெற்றது. 

வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காக மீழ்குடியேற்ற புனர்வாழ்வழிப்பு வடக்கு அபிவிருத்தி மற்றும் இந்து சமய விவகார அமைச்சின் ஊடாக யுத்தத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் புனர்வாழ்வழிக்கப்பட்டவர்களுக்குமான ஆடு மாடு கோழி மற்றும் தையல் இயந்திரங்களும்  சமுர்த்தி திணைக்களத்தினாலும் மாதிரி கிராமமாக தெரிவு செய்யப்பட்ட மாலையர்கட்டு பிரிவுக்கு  13 பேருக்கு கரவைப் பசுக்களும் ஏனைய கிராமங்களுக்கு தென்னங்கன்றுகளும் ஆரம்ப கட்டமாக வழங்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. 

இதன்போது உதவிப்பிரதேச செயலாளர் எஸ்.புவனேந்திரன் உதவி திட்டமிடல் பணிப்பாளர் எஸ்.சசிகுமார் தலைமையக முகாமையாளர் திருமதி பீ.ஜீவகுமார் முகாமைத்துவப்பணிப்பாளர் எஸ்.தியாகராசா ஆகியோர்கள் கலந்துகொண்டிருந்தனர்