மாமாங்கேஸ்வரர் ஆலய ஆடி அமாவாசை தீர்த்த உற்சவம் (நேரலை)

மட்டக்களப்பில் லயன்ஸ் கழக உறுப்பினர்கள் விழிப்புணர்வு

சர்வதேச நீரிழிவு தினத்தினை முன்னிட்டு மட்டக்களப்பு மாவட்டத்தில் பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்றுவருகின்றன.

மட்டக்களப்பில் உள்ள லயன்ஸ் கழகங்கள் இணைந்து நேற்று மாலை விழிப்புணர்வு நடவடிக்கையொன்றை மட்டக்களப்பு நகரில் மேற்கொண்டனர்.

மட்டக்களப்பு சென்டனியல் ஸ்டார் கழகம்,பாடுமீன் லயன்ஸ் கழகம்,மட்டக்களப்பு லேடிஸ் லயன்ஸ் கழகம்,லியோ கழகம் இணைந்து இந்த விழிப்புணர்வு நடவடிக்கையினை மேற்கொண்டனர்.

கிழக்கு பல்கழக சௌக்கிய பராமரிப்பு பீடத்திற்கு முன்பாக விழிப்புணர்வு நிகழ்வினை ஒன்றை நடாத்தியதுடன் விழிப்புணர்வு துண்டுப்பிரசுரங்களும் விநியோகம் செய்யப்பட்டன.

பொதுமக்களுக்கு நீரிழிவு நோயின் தாக்கம் தொடர்பில் அறிவினை வழங்கும் வகையில் இந்த விழிப்புணர்வு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டதாக மட்டக்களப்பு லேடிஸ் லயன்ஸ் கழக உறுப்பினர் டாக்டர் முருகுப்பிள்ளை நிரோசினி தெரிவித்தார்.