யேசு கிறிஸ்து பிறப்பு பெருவிழாவினை சிறப்பிக்கும் விசேட திருப்பலி

யேசு கிறிஸ்து பிறப்பு பெருவிழாவினை சிறப்பிக்கும் வகையிலான விசேட திருப்பலி பூஜையும் நற்கருணை ஆராதனையும் இன்று காலை மட்டக்களப்பு வீச்சுக்கல்முனை புனித அன்னமாள் ஆலயத்தில் நடைபெற்றது.

மட்டக்களப்பு மறை மாவட்ட ஆயர் பொன்னையா ஜோசப் ஆண்டகையின் தலைமையில் இந்த விசேட திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டது.

இதன்போது மாணவர்களுக்கான புதுநன்மை உறுதிபூசுதல்,திருவருல் அடையாளம் வழங்கும் விசேட திருப்பலியும் ஒப்புக்கொடுக்கப்பட்டது.

கிறிஸ்து பிறப்பின் செய்தியை உலக்கு அறிவிக்கும் வகையில் முன்னெடுக்கப்படும் இந்த ஆராதனைகளின்போது நாட்டில் நீடித்த சமாதானம் ஏற்படவேண்டும் என்ற வகையில் பூஜைகளும் ஒப்புக்கொடுக்கப்பட்டது.

இந்த விசேட திருப்பலி பூஜையில் மட்டக்களப்பு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் இருந்து பெருமளவான அடியார்கள் கலந்துகொண்டனர்.