பெரன்டினா தொழில் வள நிறுவனத்தின் மாணவர்களுக்கான புலமைப்பரிசில்


 
(லியோன்)

பெரன்டினா தொழில் வள நிறுவனமானது   மட்டக்களப்பு மாவட்டத்தில் வறுமை கோட்டின் கீழ் வாழும் குடும்பங்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தல் திட்டங்கள் ,சுயதொழில் கடன் உதவி ,வரிய மாணவர்களின் கல்வி நடவடிக்கை  இளைஞர் யுவதிகளுக்கான தொழில் வாய்ப்பு ,,விசேட தேவையுடையவர்களுக்கான  தொழில் வாய்ப்பு ,கல்வி போன்ற அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுத்து வருகின்றது


இதன் கீழ் மட்டக்களப்பு மாவட்டத்தில்  கல்வி பொது சாதாரண தர பரீட்சையில் சித்தியடைந்த உயர்தர கல்வியை தொடர முடியாத நிலையில் உள்ள மாணவர்களில் தெரிவு செய்யப்பட வரிய மாணவர்களுக்கு உயர்தர கல்வியை தொடர்வதற்கான  புலமைப்பரிசில் உதவி தொகை வழங்கும் நிகழ்வு இன்று மட்டக்களப்பு மஞ்சந்தொடுவாய் தொழில்நுட்ப கல்லூரி பிரதான மண்டபத்தில் நடைபெற்றது .

மட்டக்களப்பு மாவட்ட பெரன்டினா தொழில் வள நிறுவன திட்ட உத்தியோகத்தர் கெப்ரியல் ஒழுங்கமைப்பில் பெரன்டினா தொழில் வள நிறுவன மாவட்ட பணிப்பாளர் எஸ் .தினேஷ் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் மட்டக்களப்பு மண்முனை தென்மேற்கு பட்டிப்பளை பிரதேச செயலாளர் திருமதி டி .தினேஷ் , மட்டக்களப்பு கல்வி வலய திட்ட பணிப்பாளர் சி .சஜீவன் , மட்டக்களப்பு வலயக்கல்வி அலுவலக தொழில் வழிகாட்டி உத்தியோகத்தர் , எ .ஜெகநாதன் ,கிழக்கு உல்லாசப்பயணத்துறை நிறுவன பணிப்பாளர் ஆர் .ரமேஸ்குமார் , ஆகியோர் அதிதிகளாக கலந்துகொண்டனர்

மாவட்ட பாடசாலை மாணவர்களுக்கான புலமைப்பரிசில் வழங்கும் நிகழ்வில் மாணவர்கள் ,பெற்றோர்கள் கலந்துகொண்டனர்