வெல்லாவெளி சிக்கன கடன் வழங்கு கூட்டுறவுச் சங்க 32ஆவது ஆண்டு விழாவும் சாதனையாளர் பாராட்டு விழாவும்

 (படுவான்)


சிக்கன கடன் வழங்கு கூட்டுறவுச் சங்க 32ஆவது ஆண்டு விழாவும் சாதனையாளர் பாராட்டு விழாவும் இன்று (17.11.2018) வெல்லாவெளி கலாச்சார மத்திய நிலையத்தில் சங்கத்தின் தலைவர் போ.சிவநேசராசா தலைமையில் நடைபெற்றது.
இந் நிகழ்வின் போது முதன்மை விருந்தினர்களான மாவட்ட அபிவிருத்தி உதவி ஆணையாளர் கே.வி.தங்கவேல் போரதீவுப்பற்று பிரதேச செயலகத்தின் பிரதேச செயலாளர் ஆர்.ராகுலநாயகி விசேட விருந்தினர்களான தலைமை கூட்டுறவு அபிவிருத்தி உத்தியோகத்தர் திரு.கே.மகேஸ்வரன் கிராம சேவை உத்தியோகத்தர் திரு.ப.இம்சான் கூட்டுறவு அபிவிருத்தி உத்தியோகத்தர் திரு.ப.சுரேஸ்குமார் மற்றும் கிராமத்தில் உள்ள சமூக அமைப்புக்களின் தலைவர்கள் பொதுமக்கள் ஆகியோர்கள் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வின்போது வெல்லாவெளி கடன் வழங்கும் சங்கமானது மிக நீண்டகாலமாக முப்பத்திரண்டு ஆண்டுகளை தொட்டு நிக்கின்றது. அந்த வகையில் சங்கத்தின் வழச்சியும் அதனுடைய பெறுமானங்களும் மிகவும் உயந்தவை 
நூற்றுக்கு மேற்பட்ட அங்கத்தவர்களைக் கொண்டு இயங்கிய சங்கமானது இன்று பல்வேறுபட்ட நெருக்கடிகளுக்கும் துயரங்களுக்கும் ஆற்பட்டு இடைக்காலத்திலே நாட்டில் ஏற்பட்ட பிரச்சனைகளுக்கு முகம்கொடுத்து இன்றும் நிலைத்து நிற்கின்றது. 
காலப்போக்கில் தோன்றிய சங்கங்கள் பல காணாமல்போய்விட்ட நிலையிலே இன்று இந்த சங்கம் முப்பத்திரெண்டாவது அகவையும் சிறப்பாக செயல்பட்ட அங்கத்தவர்களுக்கு விருதினையும் வழங்கி முன்னோடியாக இன்று தடம்பதித்துள்ளது.
இலங்கையில் கூட்டுறவு வரலாறானது  மிகவும் நீண்ட பழைமைகொண்டது 1804ம்ஆண்டு இலங்கையில் கூட்டுறவு சங்கம் ஆரம்பிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தாகும்