தாதியர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

2030ஆம் ஆண்டு வடகிழக்கு பாரிய அபிவிருத்தி அடைந்த பகுதியாக மாறுவதற்கான வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாநகரசபை முதல்வர் தி.சரவணபவன் தெரிவித்தார்.

மட்டக்களப்பு நியூ பயனியர் வைத்தியசாலையின் தாதிய பயிற்சி நிலையத்தில் பயிற்சிகளை நிறைவுசெய்த தாதியர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.

இது தொடர்பான நிகழ்வு இன்று காலை மட்டக்களப்பு கோப்பின் மண்டபத்தில் நடைபெற்றது.

அம்கோர் நிறுவனத்தின் உதவியுடன் தொழில்வாய்ப்பற்ற இளைஞர் யுவதிகள் தெரிவுசெய்யப்பட்டு இந்த தாதிய பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளன.

இதன்கீழ் மட்டக்களப்பு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் இருந்து தெரிவுசெய்யப்பட்ட 33 இளைஞர் யுவதிகள் தமது பயிற்சியினை நிறைவுசெய்து சான்றிதழ்களைப்பெற்றுக்கொண்டனர்.

கிழக்கு மாகாண முன்னாள் சுகாதார பணிப்பாளரும் நியூ பயனியர் வைத்தியசாலையின் பணிப்பாளர்களில் ஒருவருமான கே.முருகானந்தன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாநகர ஆணையாளர் தி.சரவணபவன் கலந்துகொண்டார்.

சிறப்பு அதிதிகளாக மட்டக்களப்பு மாநகரசபையின் ஆணையாளர் கே.சித்திரவேல்,மட்டக்களப்பு மாவட்ட உதவி உள்ளுராட்சி ஆணையாளர் சி.பிரகாஷ் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இந்த நிகழ்வில் நியூ பயனியர் வைத்தியசாலையின் பணிப்பாளர்களான டாக்டர் இ.சிறிநாத்,திருமதி தர்சினி சுந்தரேசன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் தரம் ஒன்றுக்கு சேரும் மாணவர்களில் 15வீதமானவர்களே பல்கலைக்கழகம் செல்வதாகவும் மட்டக்களப்பு மாநகர முதல்வர் தெரிவித்தார்.