புதிய ஆணையாளரின் பதவி ஏற்பும் , முன்னாள் ஆணையாளரின் பியாவிடையும்


(லியோன்)

மட்டக்களப்பு மாநகர சபையின் கடமைகளை பொறுப்பேற்றுள்ள புதிய ஆணையாளரையும் , பதவி உயர்வு பெற்று செல்லும் முன்னாள் ஆணையாளரையும் பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு  மட்டக்களப்பில் நடைபெற்றது


மட்டக்களப்பு மாநகர சபைக்கு புதிதாக கடமைகளை பொறுப்பேற்று  வருகை தந்துள்ள புதிய ஆணையாளர் கே .சித்திரவேல் ஆணையாளரையும் , கிழக்கு மாகாண உள்ளூராட்சி மன்ற ஆணையாளராக பதவி உயர்வு பெற்று செல்லும் முன்னாள் ஆணையாளர் என் .,மணிவண்ணன் மற்றும் மட்டக்களப்பு பிராந்திய உள்ளூராட்சி மன்ற உதவி ஆணையாளராக பதவியேற்று வருகை தந்துள்ள  பிரகாஸ் ஆகியோரை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு  மட்டக்களப்பு மாநகர சபை பிரதான நகர மண்டபத்தில் நடைபெற்றது ,

ஆரம்ப நிகழ்வாக நகர சபை வளாகத்தில் உள்ள ஆலயத்தில் இடம்பெற்ற பூஜை வழிபாடுகளுடன் தொடர்ந்து நகர மண்டபத்தில் நடைபெற்ற பாராட்டு சிறப்புரைகளும்  பிரியாவிடை  நினைவு சின்னங்கள்   , பரிசில்கள் வழங்கும் நிகழ்வும் இடம்பெற்றது

மட்டக்களப்பு மாநகர ஆணையாளர் தியாகராஜா சரவணபவன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் மாநகர சபை பிரதி ஆணையாளர் .என் .தனஞ்சயன் , மாநகர சபை கணக்காளர் , மா,நகர சபை பொறியிளாளர்  மாநகர சபை உறுப்பினர்கள் , மாநகர சபை நிர்வாக உத்தியோகத்தர்கள் , நகர சபை ஊழியர்கள் என பலர் கலந்துகொண்டனர்