பெருங்கல்விச் சாதனையாளர் கவிஞர்.ச.கணேசமூர்த்தி அதிபருக்கு மூன்றாவது தடவையாகவும் “குருபிரதிபா பிரபா விருது”




























(படுவான் எஸ்.நவா

கல்வி அமைச்சின் ஏற்பாட்டில் கொழும்பு பண்டாரநாயக்கா ஞாபகார்த்த சர்வதேச மகாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற  அதிசிறந்த அதிபர்களைத் தேர்ந்தெடுத்து வருடந்தோறும் வழங்கிவருகின்ற “குருபிராதீபா பிரபா” விருது இவ்வருடமும் மிகச்சிறந்த கல்விச்சேவையாளர் இரவு பகலாக கல்விக்காகவே சிந்தித்து கருமமாற்றி வரும் கல்விச் செயற்பாட்டாளர் கவிஞர் திரு.ச.கணேசமூர்த்தி அதிபர் அவர்களுக்கு தொடர்ச்சியாக மூன்றாவது தடவையாக இவ்வருடமும் கிடைக்கப் பெற்றுள்ளமை சமூகத்தில் பெருவரவேற்பைப் பெற்றுள்ளது.
மட்டக்களப்பு மாவட்டத்தின் பட்டிருப்பு கல்வி வலயத்திலுள்ள போரதீவுப்பற்று கல்விக் கோட்டத்திலுள்ள கஸ்ரப்பிரதேசப் பாடசாலையான மட்/பட்/வெல்லாவெளி கலைமகள் மகா  வித்தியாலயத்தில் வகுப்பு 2ஐச் சேர்ந்த அதிபராக கடந்த ஐந்து ஆண்டுகளாக தன்னிகரற்ற சேவையாற்றி வரும் இவருக்கு மேற்படி மூன்றாண்டுகளாக தொடர்ச்சியாகக் கிடைத்துள்ள இவ்விருது தான் பிறந்த கிராமத்தில்; இடைநிலைக்கல்வி வரை கற்ற பாடசாலையில் தனது ஆசிரிய நியமனத்துக்குரிய தரம் 1ஊயைச் சேர்ந்த இப்பாடசாலையில் பல்வேறு கல்விச்சாதனைகளையும் இணை பாடவிதானைச் செயற்பாட்டுச்சாதனைகளையும்  பற்பல போட்டிகளில் கிடைத்துவரும் சாதனைகளையும் தமதாக்கி தலை நிமிர்ந்து தடம்பதித்து நிற்கும்போது இப்பாடசாலையிலிருந்து கிடைத்திருப்பது பாடசாலைக்கு வருகை தராத மாணவர்களின் வீடு வீடாகச் சென்று அவர்களை பாடசாலைக்கு வரவளைத்து கல்வியூட்டியும், மாணவர்கள் கற்கிறார்களா என்பதை விடுமுறை நாள்களிலும் இரவு, பகல் வேளைகளிலும் வீட்டுத்தரிசிப்புக்களை மேற்கொண்டும் அயராதுழைக்கும் இவ் அதிபரை மேலும் கல்வியுலகை நோக்கி ஊக்கிவிப்பதாக அமைந்துள்ளது.
மட்டக்களப்பு நகரிலிருந்து தினமும் 72 கிலோமீற்றர் பயணித்து அரும்பணியாற்றுமிவர் அதிகாலை மோட்டார் சைக்கிள் ஹெட்லைட்டிலேயே பாடசாலைக்கு வருகை தந்து பணிமுடித்து வீடு திரும்பும் போதும் ஹெட்லைட்டிலேயே வீடடைபவர் என்று பல கல்வி அதிகாரிகள் பல்வேறு சந்தர்ப்பங்களில் இவரை விதந்து பாராட்டிப் பேசியதோடல்லாமல் சம்;பவத்திரட்டில் குறிப்பெழுதியுமுள்ளதாகவும் அறிந்து மகிழ்ந்து அவரை வாழ்த்தி பாராட்டியது குறிப்பிடத்தக்கதாகும்.