பிடிவிறாந்து பிறப்பிக்கப்பட்ட நபர் கசிப்பு தயாரிப்பில் ஈடுபட்டிந்தபோது கைது


 (லியோன்)

பிடிவிறாந்து பிறப்பிக்கப்பட்ட நபர்  ஒருவரை  கைதுசெய்யும் நடவடிக்கை மேற்கொண்ட வேளையில்  குறித்த நபர் கசிப்பு தயாரிப்பில் ஈடுபட்டிந்தபோது   மட்டக்களப்பு  பொலிசாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளதாக  பொலிசார் தெரிவித்தனர் .


மட்டக்களப்பு  பொலிஸ் பிரிவுக்குற்பட்ட  மட்டக்களப்பு  கருவப்பங்கேணி அம்ரோஸ் வீதி  பகுதியில் பிடிவிறாந்து பிறப்பிக்கப்பட்ட தேடப்பட்டு வந்த  நபர்  ஒருவரை  கைதுசெய்யும் நடவடிக்கையினை மட்டக்களப்பு பொலிசாரினால் நேற்றிரவு மேற்கொண்ட வேளையில்  குறித்த  நபர் அப்பகுதியில் உள்ள வீடும் ஒன்றில்  கசிப்பு தயாரிப்பில் ஈடுபட்டிந்தபோது  கைதுசெய்யப்பட்டுள்ளதாக  மட்டக்களப்பு பொலிசார் தெரிவித்தனர்

மட்டக்களப்பு பொலிஸ் விசேட புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த தகவலுக்கு அமைய  மட்டக்களப்பு பொலிஸ் நிலைய  பொறுப்பதிகாரி தயா தீகா வதுரவின் ஆலோசனைக்கு அமைவாக ஐ பி . ஹெட்டிஹாரச்சி தலைமையிலான  பொலிஸ் புலனாய்வு  குழுவினர்  நேற்று இரவு  கருவப்பங்கேணி பகுதியில் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் போது  குறித்த பகுதியில் வீடு ஒன்றில்  இருந்து  குறித்த நபர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக  பொலிசார் தெரிவித்தனர் .

இதன்போது கசிப்பு தயாரிப்பதற்காக வைக்கப்பட்டிருந்த 7500  மில்லி லீட்டர் கசிப்பு  ,37500 மில்லி   லீட்டர் கோடா  மற்றும் கசிப்பு தயாரிப்பதற்கான உபகரணங்கள்  கைப்பற்றப்பட்டுள்ளதாக   பொலிசார் தெரிவித்தனர் .

 கைது செய்யப்பட்ட நபரை  நீதிமன்ற சட்ட நடவடிக்கைக்காக மட்டக்களப்பு நீதவான நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்