மட்டக்களப்பு மாவட்டத்திற்கு பெருமை சேர்த்த மாணவர்களை கௌரவிப்பு

மட்டக்களப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட தன்னாமுனை புனித ஜோசப் கல்லூரிக்கு பெருமை சேர்த்த மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு இன்று காலை பாடசாலையில் நடைபெற்றது.

கிழக்கு மாகாண பாடசாலைகளுக்கிடையிலான ஆங்கில நாடக போட்டியில் தன்னாமுனை புனித ஜோசப் கல்லூரி முதல் இடத்தினைப்பெற்று தேசிய போட்டிக்கு தெரிவுசெய்யப்பட்டுள்ளது.

இந்த மாணவர்களையும் அதற்கு வழிகாட்டிய ஆசிரியரையும் கௌரவிக்கும் நிகழ்வு இன்று காலை பாடசாலை அதிபர் எம்.பற்றிக் தலைமையில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன் பிரதம அதிதியாக கலந்துசிறப்பித்தார்.

சிறப்பு அதிதிகளாக மட்டக்களப்பு வலய உதவி கல்விப்பணிப்பாளர் எம்.எச்.எம்.ரமீஸ்,கிழக்கு பல்கலைக்கழக ஆங்கில மொழிக்கல்விப்பீடத்திற்கான தலைவர் கலாநிதி என்.கெனடி,ஏறாவூர்ப்பற்று கோட்டக்கல்வி அதிகாரி எம்.பாசுப்ரமணியம்,மைலம்பாவெளி மியானி நிலைய மேலாளர் அருட்தந்தை இருதயராஜ்,அருட்தந்தை அம்புரோஸ் அடிகாளர்,ஆங்கிலவள நிலைய வளவாளர் திருமதி வி.மகேஸ்வரன் உட்பட பலர் இதில் கலந்துகொண்டனர்.

இதன்போது பாடசாலை மாணவர்கள் கௌரவிக்கப்பட்டதுடன் அதனை வழிநடத்திய ஆசிரியர்களும் கௌரவிக்கப்பட்டனர்.

இந்த நாட்டில் கல்விக்கொள்கையில் மாற்றம் ஏற்படுத்தப்படவேண்டும் என தான் தொடர்சசியாக வலியுறுத்திவருவதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் தெரிவித்தார்.

கல்வியில் சாதனை படைத்துவரும் நாடுகளின் கல்விக்கொள்கைகளை இங்கு அறிமுகம் செய்வதன் மூலம் பல  மாற்றங்களை கல்வித்துறை ஊடாக ஏற்படுத்தமுடியும் எனவும் அவர் தெரிவித்தார்.