மட்டு படுவான்கரையில் 30 வருடத்தின் பின் கைவிடப்பட்டிருந்த பொதுச்சந்தை இன்று மக்களின் பாவனைக்கு கையளிக்கப்பட்டது


 (படுவான் எஸ்.நவா)

போரதீவுப்பற்று பிரதேச செயலகப் பிரிவுகளுக்குட்பட்ட  பாலையடிவட்டை பிரதேசத்தில் முப்பது வருடத்தின் பின் கைவிடப்பட்டிருந்த பாதலையடிவட்டை பொதுச்சந்தை இன்று(13) போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் அவர்களின் தலைமையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது
போரதீவுப்பற்று பிரதேச செயலகமும் சமுர்த்தி பிரிவும் இணைந்து ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்வு இங்கு உற்பத்திசெய்யப்படுகின்ற உள்ளீடுகளை கொண்டு இப்போதுசந்தை ஆரம்மிக்கப்பட  வேண்டும் என கடந்த (09) திகதி நடைபெற்ற ஆரம்ப நிகழ்வின் போது தீர்மானிக்கப்பட்டு இன்று (13) சகல விதமான விற்பனையாளர்கள் வர்த்தகர்கள் வருகை தந்து பல விதமான மரகக்கறி வகைகள் இறைச்சி வகைகள் போன்ற உற்பத்திப்பொருட்களை  விற்பனை செய்தனர்
வெல்லாவெளி சமுர்த்தி வங்கியும் இவ்விடத்திற்கு தற்காலயமாக கொண்டுவந்து பொதுமக்களுக்குரிய முத்;திரை காசுக்குரிய கொடுப்பனவும் வழங்கப்பட்டிருந்தது
இந்நிகழ்வின்போது பிரதே செயலாளர் ஆர்.ராகுலநாயகி பிரதேச சபையின் தவிசாளர் யோ.ரஜனி உதவிப்பிரதேச செயலாளர் எஸ்.புவநேந்திரன் பிரதேச செயலக உத்தியோக்தர்கள் பிரசே சபையின் உறுப்பினர்கள் பொலிஸ் இராணுவம் மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டிருந்தனர் இதன்போது போரதீவுப்பற்று பிரதேச சபை முழுமையான ஒத்துழைப்புக்களையும் வழங்கியிருந்தது குறிப்பிடத்தக்கதாகும்