மட்டக்களப்பு மாவட்ட விவசாய குழுக்கூட்டம்(லியோன்)


மட்டக்களப்பு மாவட்ட விவசாய குழுக்கூட்டம்  இன்று மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது .


அரசாங்க அதிபர் எம் .உதயகுமார் தலைமையில் நடைபெற்ற மாவட்ட விவசாய குழுக்கூட்டத்தில் விவசாய துறையினை நவீனமயப்படுத்தல் ,,கமநல அபிவிருத்தி , ,விதை மற்றும் நடுகைப் பொருட்கள் அபிவிருத்தி , விதை அத்தாடசிப்படுத்தல் , கால்நடை உற்பத்தி ,தென்னை பயிர்செய்கை கடற்தொழில் நீரியல் வளம் , விவசாய கமநல காப்புறுதி ,, சமுர்த்தி அபிவிருத்தி , ,  விவசாயிகளின் பயிர்ச்செய்கை நடவடிக்கைகளுக்காக தப்பாக்கி வழங்குதல் ,பெரும்போக கால அட்டவணை போன்ற பல்வேறு விடயங்கள் குழுக்கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டது  .

இந்த விவசாய குழுக்கூட்டத்தில்  மாவட்ட நீர்ப்பாசன திணைக்கள மத்தி பணிப்பாளர் எஸ் எம் பி எம்  அசார் ,மாவட்ட விவசாய பணிப்பாளர் வை .பி . இக்பால்  ,மாவட்ட விவசாய திணைக்கள அதிகாரிகள் நீர்ப்பாசன திணைக்கள அதிகாரிகள், ,,பிரதேச செயலாளர்கள் ,கல்வி திணைக்கள அதிகாரிகள் உட்பட அரச திணைக்கள அதிகாரிகள் கலந்துகொண்டனர் .