பொலிஸ் திணைக்களத்தின் 152 வது வருட நிகழ்வு


(லியோன்)

இலங்கை பொலிஸ் திணைக்களத்தின் 152  வது பொலிஸ் தின நிகழ்வு  இன்று நாடெங்கிலும் உள்ள பொலிஸ் நிலையங்களில் அனுஸ்டிக்கப்பட்டு வருகின்றது.


 மட்டக்களப்பு மாவட்டத்திற்கான பொலிஸ்  திணைக்களத்தின்   152 வது  வருட நிகழ்வு  மட்டக்களப்பு மாவட்ட  சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் எம் என் எஸ் எம் .மெடிஸ்  தலைமையில்  மட்டக்களப்பு பொலிஸ் தலைமையக வளாகத்தில் நடைபெற்றது   

இந்த நிகழ்வில் மட்டக்களப்பு பிரதேச பொலிஸ்  அத்தியட்சகர் சந்திரபால ,மட்டக்களப்பு களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரதேச பொலிஸ் அத்தியட்சகர் எல் ஆர் . ,குமார சிறி ஆகியோர்  கலந்துகொண்டனர்

ஆரம்ப நிகழ்வாக  பொலிஸ் திணைக்கள கொடி ஏற்றப்பட்டு பொலிஸ் மற்றும்  தேசிய கீதம் இசைக்கப்பட்டது. அனைத்தொடர்ந்து மட்டக்களப்பு மாவட்ட பொலிஸ் அத்தியட்சகரின்  விசேட உரை நிகழ்த்தப்பட்டது.

இந்த நிகழ்வில் பொலிஸ் அதிகாரிகள், பொலிஸ் திணைக்கள உத்தியோகத்தர்கள், , மதத்தலைவர்கள் ,சிவில்  அமைப்புகளின் பிரதிநிதிகள் என பலர்  கலந்துகொண்டனர்.