புளியந்தீவு தெற்கு சனசமூக நிலையம் ஆரம்பிப்பு…

புளியந்தீவு தெற்கு சனசமூக நிலையம் ஆரம்பிப்பு…

புளியந்தீவு தெற்கு சனசமூக நிலையம் ஆரம்பிக்கும் கூட்டம் இன்றைய தினம் சனசமூக அபிவிருத்தி உத்தியோகத்தர் அன்பழகன் குரூஸ் தலைமையில் புளியந்தீவு தெற்கு வட்டாரப் பணிமனையில் இடம்பெற்றது.

புளியந்தீவு தெற்கு வட்டாரத்திற்கான சனசமூக நிலையம் இல்லாமையைக் கருத்திற்கொண்டு மாநகரசபை 18ம் வட்டார உறுப்பினர் அந்தோனி கிருரஜன் அவர்களின் ஏற்பாட்டில் மேற்படி கூட்டம் ஒழுங்கு செய்யப்பட்டு சனசமூக நிலையம் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இக்கூட்டத்தில் மாநகரசபை உறுப்பினர் மற்றும் பிரதேசத்தைச் சேர்ந்த பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர். இதன் போது சனசமூக நிலையத்திற்கான நிர்வாகத் தெரிவு இடம்பெற்றமையும் குறிப்பிடத்தக்கது.