மட்டக்களப்பு நகர் பிரதான புகையிரத கடவை பாதுகாப்பற்ற நிலையில் - மக்கள் விசனம்


(லியோன்)

மட்டக்களப்பு எல்லை வீதிக்கு குறுக்கே செல்லும் புகையிரத கடவை பாதுகாப்பற்ற நிலையில் காணப்படுவதனால்  அவ்வீதி ஊடாக செல்லும் பயணிகள் ,பாடசாலை மாணவர்கள் பெரும் அச்சத்தின்  மத்தியில் பயணிப்பதாக தெரிவிக்கின்றனர்


மட்டக்களப்பு பொலிஸ் பிரிவுக்குற்பட்ட மட்டக்களப்பு பிரதான புகையித நிலையத்திற்கு முன்னாள் உள்ள எல்லை  வீதிக்கு குறுக்கே செல்லும் மட்டக்களப்பு கொழும்புக்கான பிரதான புகையிரத பாதையின் உள்ள பிரதான புகையிரத கடவை பாதுகாப்பற்ற நிலையில் காணப்படுவதனால் இந்த புகையிரத கடவை ஊடாக மட்டக்களப்பு நகருக்கு செல்லும் பயணிகள் ,பாடசாலை மாணவர்கள் , வாகன சாரதிகள் பெரும் அச்சத்தில் மத்தியில் பயணிக்க வேண்டிய நிலை உள்ளதாக  தெரிவிக்கின்றனர் .

நாளாந்தம் சுமார் ஆயிரத்திற்கு மேற்பட்ட வாகனங்கள் , பொதுமக்கள் பயணிக்கும் இந்த பிரதான வீதியில் உள்ள புகையிரத கடவைக்கு    பாதுகாப்பு வேலி (பெரியல்)  திருத்தப்படாமல் இருப்பதனால் புகையிரத வண்டி பயணிக்கும் போது  புகையிரத கடவையை கடக்கும் வாகனங்களை நிறுத்துவதற்கு  கயிற்றினை கொண்டு  தடுத்து  நிறுத்த படுகின்றன .

இவ்வாறான நிலை மட்டக்களப்பு பிரதான புகையித நிலையத்திற்கு முன்னாள்  உள்ளதை கவனத்தில் கொல்லாமை கவலைக்குரிய விடயம், எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதற்கான உடன் நடவடிக்கையினை எடுக்க வேண்டும் என பொது  மக்கள்  வேண்டுகோள் விடுக்கின்றனர்

இவ்வாறான நிலையில் மட்டக்களப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அனைத்து பகுதிகளில் உள்ள புகையிதர பாதுகாப்பு கடவைகளின் பாதுகாப்பு வேலி (பெரியல்)  திருத்தபடாமல் உடைந்து காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது .