“சமாதானத்திற்கு கை கொடுப்போம்” சர்வதேச சமாதான தினம் நிகழ்வு


 (லியோன்)

மட்டக்களப்பு கரித்தாஸ்  எகெட் நிறுவனத்தின் ஏற்பாட்டில் “சமாதானத்திற்கு கை கொடுப்போம்” எனும் தொனிப்பொருளில் சர்வமதங்களும் சங்கமிக்கும் சர்வதேச சமாதான தினம் நிகழ்வு கரித்தாஸ்  எகெட்  இயக்குனர் அருட்பணி அலக்ஸ் ரொபட் தலைமையில் மட்டக்களப்பு சாள்ஸ் மண்டபத்தில் இன்று மாலை நடைபெற்றது


சர்வதேச சமாதான தின நிகழ்வின் ஆரம்ப நிகழ்வாக தமிழ்த்தாய் வாழ்த்துடன் மங்கள விளக்கேற்றப்பட்டு நிகழ்வு ஆரம்பமானது

இந்நிகழ்வில் மாணவர்களின்  கலாசார பண்பாட்டு நிகழ்வுகளும் அதிதிகளின் விசேட உரைகளும் இடம்பெற்றதுடன் நிகழ்வில் கலந்துகொண்ட அதிதிகளுக்கு சர்வதேச சமாதான தின நினைவு சின்னங்களும் வழங்கி வைக்கப்பட்டது

இதனை தொடர்ந்து சர்வதேச சமாதான தினத்தை சிறப்பிக்கு வகையில் சமாதானமும் மனித மாண்பும் எனும் தலைப்பின் கீழ் மாவட்ட ரீதியில் பாடசாலை மட்டத்தில் நடத்தப்பட்ட போட்டிகளில் வெற்றிப்பெற்ற பாடசாலைகளுக்கு பங்குபற்றிய மாணவர்களுக்கு சான்றிதழ்களும் ,பணப்பரிசிகளும் , நினைவு சின்னங்களும் அதிதிகளினால் வழங்கி வைக்கப்பட்டது    

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக மட்டக்களப்பு மறை மாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை எ .தேவதாசன் , சிறப்பு அதிதிகளாக  இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு மட்டக்களப்பு இணைப்பாளர் எ சி எ அசிஸ் , மற்றும் ஆன்மீக அதிதிகளாக கல்லடி இராம கிருஷ்ண மிஷன் முகாமையாளர்  சுவாமி தக்ஷஜானந்தா ,மற்றும் சர்வமத தலைவர்கள் , மாவட்ட சர்வமத அமைப்பின் உறுப்பினர்கள் , பாடசாலை மாணவர்கள் ,ஆசிரியர்கள் , இளைஞர் யுவதிகள் கலந்துகொண்டனர்