வருமான வரி நிலுவைகளை சேகரிக்கும் வேலைத்திட்டம் ஆரம்பம்


(லியோன்)

மட்டக்களப்பு மாநகர சபையானது  ஆசிய மன்றத்தின் அனுசரணையுடன்  வரிப்பணம் அபிவிருத்திக்கான சமர்ப்பணம் எனும் தொனிப்பொருளில்    அறவீடு  செய்யும் வேலைத்திட்டத்தினை ஆரம்பித்துள்ளது .


மட்டக்களப்பு மாநகர சபையானது நடப்பு வருடத்திற்கான திட்டமிடப்பட்ட வருமான நிலுவைகளை அறவீடு செய்வதன் மூலம் இந்த வருட பாதீட்டில் உள்ளடக்கப்பட்டுள்ள மக்களுக்கான அபிவிருத்தி வேலைகளை செய்யவேண்டிய நிலையில் மக்கள் பிரதிநிதிகளை கொண்ட சபையானது  ஆசிய மன்றத்தின் அனுசரணையுடன்  செப்டெம்பர் மாதத்தை வருமான அறவீட்டு மாதமாக பிரகடனப்படுத்தி இதனை ஆரம்பித்துள்ளது

இதற்கு அமைவாக  செப்டெம்பர் முதலாம் வாரத்தினை மக்களுக்கான விழிப்புணர்வூட்டல் வாரமாகவும்  இரண்டாம் ,மூன்றாம் வாரத்தில் வீடு வீடாக சென்று வரி நிலுவைகளை அரவீடுதல் செய்தலும்,  ,நான்காம் வாரத்தில் வரியிறுப்பாளர்களுக்கான  சட்ட நடவடிக்கை மேற்கொள்ளல் , இறுதி  நாள் அன்று சிறந்த வரியிறுப்பாளர்களை கௌரவித்தல்  போன்ற நடவடிக்கையுடன்  மட்டக்களப்பு மாநகர சபையால்  சகல வட்டாரங்களுக்கான வருமான நிலுவைகளை சேகரிக்கும் வேலைத்திட்டம்  ஆரம்பிக்கப்படவுள்ளன.

மட்டக்களப்பு மாநகர முதல்வர் தியாகராஜா சரவணபவன் தலைமையில்  மாநகர சபை மண்டபத்தில் நடைபெற்ற  நிகழ்வில் மக்களுக்கு விழிப்புணர்வூட்டும் பதாகைகள் மற்றும்  பிரசுரங்கள் வழங்கி வைக்கப்பட்டது

இந்நிகழ்வில் மாநகர ஆணையாளர் என் .மணிவண்ணன் ,பிரதி ஆணையாளர் என் .தனஞ்சயன் , பிரதி முதல்வர் கந்தசாமி சத்தியசீலன் ,  மாநகர சபை கணக்காளர்  ஜோன் பிள்ளை ,ஆசிய மன்றத்தின் பணிப்பாளர் கோபா தம்பி குமார் , ஆசிய மன்றத்தின் நிகழ்ச்சி திட்ட உத்தியோகத்தர் நிர்மி விதாரண , ஆசிய மன்றத்தின் சட்ட ஆலோசகர் ஜயதிஸ்ஸ மற்றும்  மாநகர சபை   உத்தியோகத்தர்கள் ,மாநகர சபை உறுப்பினர்கள் ,வரியிறுப்பாளர் சங்கத்தின் தலைவர் , செயலாளர் உட்பட பலர்  கலந்துகொண்டனர் .