வருமான நிலுவைகளை அறவீடு செய்யும் நடவடிக்கைகள் ஆரம்பம்


 (லியோன்)

மட்டக்களப்பு மாநகர சபையினால்  நடப்பு வருடத்திற்கான திட்டமிடப்பட்ட வருமான நிலுவைகளை அறவீடு செய்வதன் மூலம் இந்த வருட பாதீட்டில் உள்ளடக்கப்பட்டுள்ள மக்களுக்கான அபிவிருத்தி வேலைகளை செய்யவேண்டிய நிலையில் ஆசிய மன்றத்தின் அனுசரணையுடன்  வரிப்பணம் அபிவிருத்திக்கான சமர்ப்பணம் எனும் தொனிப்பொருளில்  வருமான நிலுவைகளை அறவீடு  செய்யும் வேலைத்திட்டத்தினை ஆரம்பித்துள்ளனர்
 .

இதற்கு அமைவாக  செப்டெம்பர் முதலாம் வாரத்தினை மக்களுக்கான விழிப்புணர்வூட்டல் வாரமாக ஆரம்பிக்கப்பட்டு  இரண்டாம் ,மூன்றாம் வாரத்தில் வீடு வீடாக சென்று வரி நிலுவைகளை அறவீடு செய்யும் வாரமாக ஆரம்பிக்கப்பட்டுள்ளன

இதற்கு அமைய மட்டக்களப்பு மாநகர முதல்வர் தியாகராஜா சரவணபவன்  தலைமையில் மாநகர ஆணையாளர் என் .மணிவண்ணன் ,பிரதி ஆணையாளர் என் .தனஞ்சயன் ,மாநகர சபை   உத்தியோகத்தர்கள் இணைந்து மட்டக்களப்பு மாநகர சபைக்குட்பட்ட   சகல வட்டாரங்களுக்கான வருமான நிலுவைகளை சேகரிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்