தாண்டவன்வெளி தூய காணிக்கை அன்னை ஆலய 100 வது ஆண்டு நிகழ்வுகள்


(லியோன்)


மட்டக்களப்பு தாண்டவன்வெளி திரு அவை தனியான பணித்தளமாக பிரகடனப் படுத்தப்பட்டு
100 ஆண்டுகள் பூர்த்தியினை சிறப்பிக்கும் விசேட திருப்பலியும் , நிகழ்வுகளும் இன்று நடைபெற்றது


மட்டக்களப்பு மறை மாவட்டத்தில் 1624 ஆம் ஆண்டு கட்டப்பட்ட  தாண்டவன்வெளி  தூய காணிக்கை அன்னை திரு அவை புளியந்தீவு இணைப்பேரலய பணித்தளத்தோடு இணைந்திருந்த வேளையில் 1918 ஆம் ஆண்டு  செப்டெம்பர் ஒன்பதாம் திகதி தாண்டவன்வெளி திரு அவை தனியான பணித்தளமாக பிரகடனப் படுத்தப்பட்டு  அருள்பனியாளர் ஒருவரின் நிர்வாகத்தில் செயல்பட்டு வந்த தாண்டவன்வெளி தூய காணிக்கை அன்னை ஆலயத்தின் 100  வது ஆண்டு  நிகழ்வுகள்  இன்று நடைபெற்றது

100 ஆண்டுகள் பூர்த்தியினை சிறப்பிக்கும் விசேட திருப்பலியும் விசேட நிகழ்வுகளும் மட்டக்களப்பு மறை மாவட்ட ஆயர் ஜோசப் பொன்னையா ஆண்டகை தலைமையில் நடைபெற்றது 

மறை மாவட்ட ஆயர் ஜோசப் பொன்னையா ஆண்டகை தலைமையில் பங்கு தந்தை அருட்பணி ரமேஷ் கிறிஸ்டி , அருட்பணி எலக்ஸ் ரொபட்  அடிகளார் இணைந்து ஒப்புகொடுக்கப்பட்ட திருப்பலியை தொடர்ந்து நூறாவது ஆண்டினை சிறப்பிக்கும் வகையில் காணிக்கை அன்னை ஆலயத்தின் வரலாற்றை நினைவு கூறும் நூற்றாண்டு சிறப்பு மலர் வெளியீட்டு வைக்கப்பட்டது

இந்நிகழ்வுகளில் பங்கு மக்கள் , அருட்சகோதரிகள் ,அருட்சகோதரர்கள் கலந்து சிறப்பித்தனர்