வடகிழக்கு அபிவிருத்திக்கான ஜனாதிபதியின் செயலணியில் முன்வைக்கப்பட்ட கோரிக்கை


புல்லுமலையில் அமைக்கப்பட்டுவரும் குடிநீர் போத்தல் தொழிற்சாலையினை நிறுத்த நடவடிக்கையெடுக்குமாறு மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் வேண்டுகோள்விடுத்துள்ளார்.

இன்று கொழும்பில் நடைபெற்ற வடகிழக்கு மாகாண அபிவிருத்திக்கான செயலணியின் கூட்டத்தில் கலந்துகொண்டு இந்த கோரிக்கையினை முன்வைத்தார்.

இதன்போது குறித்த தொழிற்சாலை தொடர்பில் கவனத்தில் கொள்வதாகவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.இந்த செயலணியில் கலந்துகொண்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன் இந்த கோரிக்கையினை முன்வைத்ததுடன் இதன்போது பல்வேறு கோரிக்கைகளையும் முன்வைத்தார்.

1.புல்லுமலையில் அமைக்கப்படும் குடிநீர் போத்தல் தொழிசாலையை நிறுத்துமாறு கூறியதுடன் அது தொடர்பான மகஜரையும் ஜனாதிபதியிடம் நேரடியாக கையளித்தார்.


2. முறக்கொட்டான்சேனை இராணுவ முகாம் காணி விடுவிப்பு மற்றும் குருக்கள்மடாம் காணி விடுவிப்பு, பட்டிப்பளை அசிரியர் பயிற்சி நிலைய காணி விடுவிப்பு தொடர்பாக ஜனாதிபதியிடம் கோரிக்கை,


3. கடந்த கால யுத்தத்தில் பாதிக்கப்பட்டு காணப்படும் தொழிற்சாலைகளை மீள திறக்கப்படவேண்டும்.வாழைச்சேனை காகித ஆலை, ஓட்டு தொழிற்சாலைகள், அரச அச்சகம், அரசி ஆலைகள் மீள இயங்கச்செய்யப்படவேண்டும்
.

4. படுவான்கரை மக்களுக்கான குடிநீர் பிரச்சினைக்கான தீர்வினை காண்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள.ளப்படவேண்டும்.

6. கித்துள் - உறுகாம திட்டம், தம்பிட்டிய வாயல்கள் நீரினுள் செல்வதை தடூப்பதற்காக நீரின் கொள்ளளவு குறைக்கப்பட்டு இதனால் நீர்ப்பாசன வயல்களின் பரப்பு குறைக்கப்பட்டுள்ளது.


6. மேல்ய்ச்சதரை - மகாவலிவலதுகரை மற்றும் கித்துள் உறுகாம திட்டங்கள்  நடைமுறைபடுத்தமுன் தீர்மானம் எடுத்துக் கொள்ள வேண்டும். 7. யானைத்தாக்கம் உள்ள கிராமங்களுக்கு யானை வேலி அமைக்கப்பட வேண்டும் உட்பட பல முன்மொழிவுகளை ஜனாதிபதியின் கவனத்திற்கு பாராளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரன் கொண்டுசென்றுள்ளார்.