மண்டூர் ஸ்ரீ கந்தசுவாமி ஆலய தீர்த்தோற்சவ நிகழ்வுகள்.

 (மண்டூர் நிருபர்)  கிழக்கிலங்கையின் வரலாற்றுச் சிறப்புமிக்க சின்னக்கதிர்காமம் என்றழைக்கப்படும்  மண்டூர் ஸ்ரீகந்தசுவாமி ஆலய வருடாந்த உற்சவமானது கடந்த 06.08.2018(திங்கட்கிழமை) அன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமானது. இறுதி நாளான இன்று 26.08.2018(ஞாயிற்றுக்கிழமை)   தீர்த்தோற்சவ நிகழ்வுகள் காலை 9.30 மணியளவில் மண்டூர் மூங்கிலாற்று சங்கமத்தில் பல்லாயிரக்கணக்கான பக்தர்களின் பங்குபற்றுதலுடன் இடம்பெற்றது.இந்நிகழ்வில் நாட்டின் பல பாகங்களில் இருந்தும் அதிகளவான பக்தர்கள் கலந்துகொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.Add caption


Add caption