கொக்கட்டிச்சோலையில் ஆயுதங்கள் மீட்பு-தொடர்ந்து தேடுதல் பணிகள் முன்னெடுப்பு

மட்டக்களப்பு மாவட்டத்தின் கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சில்லிக்கொடியாறு பகுதியில் இருந்து இன்று ஒரு தொகை ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

நேற்று மாலை கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் இந்த ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளதாக கொக்கட்டிச்சோலை பொலிஸார் தெரிவித்தனர்.
சில்லிக்கொடியாறு பாலத்திற்கு அருகில் இருந்தே இந்த ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இதன்போது ரி56 ரக துப்பாக்கிகள் மூன்றும் அதற்குரிய மகசின்கள் ஐந்தும் ஒரு குழியில் பொலித்தின் பைகளினால் சுற்றப்பட்ட நிலையில் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த ஆயுதங்கள் கடந்த காலத்தில் விடுதலைப்புலிகளினால் இப்பகுதியில் மறைத்துவைக்கப்பட்டிருக்கலாம் என தெரிவித்த பொலிஸார் இது அப்பகுதியில் தொடர்ந்து சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுவருதாகவும் கொக்கட்டிச்சோலை பொலிஸார் தெரிவித்தனர்.