திருகோணமலை இளைஞர்கள் ஈச்சந்தீவுக்கு விஜயம்.திருகோணமலை மாவட்ட இளைஞர் யுவதிகள்  மண்முனை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவு ஈச்சந்தீவு கிராமத்திற்கு நேற்று வியாழக்கிழமை (16.08) பிற்பகல் விஜயம் செய்துள்ளனர்.

திருகோணமலை புதியவிடியல் அமைப்பின் ஏற்பாட்டில் வருகைதந்த  40 இளைஞர் யுவதிகள் ஈச்சந்தீவு உதயசூரியன் இளைஞர் கழகத்துடன் சந்திப்பொன்றை மேற்கொண்டு  அனுபவ பகிர்வு கலந்துரையாடல்களில் ஈடுபட்டனர்.

 இளைஞர்கழக செயற்பாடுகளில் இளைஞர்களை ஊக்குவிக்கும் பொருட்டும், இளைஞர் கழக செயற்பாடு , வேலைத்திட்டம் தொடர்பாக
இளைஞர் கழகமொன்றை சாவால்களை முறியடித்து  வெற்றிகரமாக இயக்குவதற்குமான அனுப பகிர்வுகளை பகிர்ந்து கொள்ளும் நிகழ்வு    ஈச்சந்தீவு உதய சூரியன் இளைஞர் கழக தலைவர் செல்வன் வி.றிசாந்தன் தலைமையில்  இடம்பெற்றது.

 இந்த நிகழ்வில்  மண்முனை மேற்கு பிரதேச இளைஞர் சேவை அலுவலர் , புதிய விடியல் அமைப்பின் வடகிழக்கு மாகாண இணைப்பாளர் பியூலா வாசுகி , ஈச்சந்தீவுஉதயசூரியன் விளையாட்டுக்கழக தலைவரும் அபிவிருத்தி உத்தியோகஸ்தர்ருமான, இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர் செல்வி அருள்நாயகம் தர்ஷிக்கா, மண்முனை மேற்கு பிரதேச இளைஞர் கழகங்களின் சம்மேளன தலைவரும்,  தேசிய சம்மேளன பிரதிநிதியுமான ரி.விமலராஸ் ஆகியோர் அதிதிகளாக கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

ஒரு நாள் பயணமாக மட்டக்களப்புக்கு வருகை தந்த இந்த இளைஞர் குழு மாவட்டத்தின் பிரசித்த இடங்களை பார்வையிட்டதுடன்,மயிலம்பாவெளி காமாட்சி அம்மன் ஆலயம்,  மாமாங்க பிள்ளையார் ஆலயம், கொக்கட்டிச்சோலை தான்தோன்றி ஈஸ்வரர் போன்ற ஆலயங்களையும் தரிசித்துள்ளனர்.