காத்தான்குடி பகுதியில் மறைக்கப்பட்டுள்ள மட்டக்களப்பு மாநகரசபையின் பெயர் பலகைகள்

இலங்கையில் மிகப்பழமையான மாநகரசபையில் ஒன்றாக கருதப்படும் மட்டக்களப்பு மாநகரசபையின் வரவேற்பு பலகைகள் பல இடங்களில் ஏனைய பிரதேசங்களின் பெயர் பலகைகளினால் மறைக்கப்பட்டுள்ளமை தொடர்பில் உரியதரப்பினர் கவனம் செலுத்தவேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மட்டக்களப்பு மாநகரசபையின் எல்லைப்பகுதியை குறிக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ள பெயர் பலகைகள் ஏனைய பிரதேச பெயர் பலகைகளினால் மறைக்கப்பட்டுள்ளதை காணமுடிகின்றது.

மட்டக்களப்பு-கல்முனை பிரதான வீதியில் மட்டக்களப்பு மாநகரசபைக்கும் காத்தான்குடி நகரசபைக்கும் எல்லைப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள மட்டக்களப்பு மாநகரசபையின் பெயர் பலகைகள் மறைக்கப்பட்டுள்ளதை காணமுடிகின்றது.

காத்தான்குடி நகரசபையினால் தமது எல்லை பிரதேசத்தினை அடையாளப்படுத்தும் வகையில் பாரிய வளைவு அமைக்கப்பட்டுள்ள நிலையில் மட்டக்களப்பு மாநகரசபையின் எல்லையினை வெளிப்படுத்தும் வகையில் அதன் அருகில் வைக்கப்பட்டிருந்த சிறிய பெயர் பலகைகூட இன்று வேறு ஒரு பெயர் பலகையினால் மறைக்கப்பட்டுள்ளது.

இலங்கையின் பழமையானதும் பிரசித்திபெற்றதுமான மட்டக்களப்பு மாநகரசபையினை அடையாளப்படுத்தும் வகையில் எந்த வளைவினையும் அமைக்க இதுவரையில் யாரும் நடவடிக்கை எடுக்காமை தொடர்பில் மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.