கூழாவடியில்; அச்சுறுத்தலான குளவிக்கூடு அழிப்பு –மாநகரசபை உறுப்பினர் களத்தில்

மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட கூழாவடி பகுதியில் அமைந்திருந்த கருங்குளவி கூடு நேற்று வெள்ளிக்கிழமை மாலை மாநகரசபையினால் அழிக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு வரலாற்றுசிறப்புமிக்க மாமாங்கேஸ்வரர் ஆலயத்திற்கு அருகில் உள்ள வீடு ஒன்றில் இருந்த குளவிக்கூடே இவ்வாறு அழிக்கப்பட்டுள்ளது.

சுமார் இரண்டு அடி நீளத்தில் இருந்த இந்த குளவிக்கூடு தொடர்பில் மட்டக்களப்பு மாநகரசபை உறுப்பினர் பு.ரூபராஜின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டதையடுத்து நேற்று இரவு மட்டக்களப்பு மாநகரசபையின் அனர்த்த தடுப்பு பிரிவினரின் உதவியுடன் குறித்த குளவிக்கூடு அழிக்கப்பட்டது.

மாமாங்கேஸ்வரர் ஆலய உற்சவம் ஆரம்பிக்கவுள்ள நிலையிலும் குறித்த பகுதியில அதிகளவு மக்கள் வசிக்கும் நிலையிலும் குறித்த குளவிக்கூடு பெரும் அச்சுறுத்தலாக இருந்துவந்துள்ளது.

இது தொடர்பில் உரிய நடவடிக்கையெடுத்த மட்டக்களப்பு மாநகரசபை உறுப்பினர் பு.ரூபராஜுக்கு பிரதேச மக்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.