(படுவான் எஸ்.நவா)

இசைகருவிகள் வழங்கும் நிகழ்வு
அம்பாரை மாவட்டத்தில் உள்ள நற்பட்டிமுனை ஸ்ரீ முருகன் ஆலயத்தின் இன்று இறுதிநாள் தீர்த்த உற்சவத்தின் போது நிருவாகத்தின் வேண்டுகோளுக்கிணங்க நிக் அன்ட் நெல்லி பவுண்டேசன் நிறுவனத்தின் நிதி உதவியுடன் கிழக்கிலங்கை இந்து சமயசமூக அபிவிருத்தி சபையினால் இசைக்கருவிகள் வழங்கும் நிகழ்வு இன்று ஆலயத்தின் பிரதமகுரு சிவஸ்ரீ நடராஜ சதீஸ்வரசர்மா அவர்களின் ஆசியுரையுடன்  தலைவர் திரு.கி.வித்தியானந்தன் அவர்களின் தலைமையில் பி.ப 12.00 மணியளவில் இடம்பெற்றது.
இதன்போது கிழக்கிலங்கை இந்துசமய சமூக அபிவிருத்தி சபையின் தலைவர் திரு.த.துஷ்யந்தன் அவர்களின் உரையில்; எமது சபையானது நீண்டகாலமாக இயங்கிக்கொண்டு வருகின்றது எமது பணியானது ஆலயங்களில் பஜனை பாடுவதற்குரிய இசைக்கருவிகள் வழங்குதல்  ஆரம்ப பாடசாலைகளில் கல்வி கற்கின்ற மாணவர்களுக்கு தேவையான கற்றல் உபகரணங்கள் வழங்குதல் அதேபோன்று சிறுவர்கள் முதியோர்கள்ளை கௌரவித்தல் போன்றவற்றினூடாக எமது பணிகள் தொடர்ந்து பயணித்துக்கொண்டிருக்கின்றது இதன் ஒரு கட்டமாக அம்பாரை மாவட்டத்தில் முதல் தடவையாக நற்பட்டிமுனை ஸ்ரீகந்தசுவாமி ஆலயத்திற்கு ஆலய நிருவாத்தின் வேண்டுகோளுக்கமைவாக இன்று இசைகருவிகள் வழங்கிவைக்கப்படுகின்றது.; இதேபோன்ற பணிகள் இப்பிரதேசத்திற்கு தொடர்ந்து எமது பணிகள் தொடரும்; என தனதுரையில் கூறிக்கொண்டனர்
இன் நிகழ்வின்போது ஆலயத்தின் பிரதம குரு சிவஸ்ரீ நடராஜ சதீஸ்வரசர்மா ஆலய தலைவர் திரு.கி.வித்தியானந்தன் விஸ்னு ஆலய தலைவர் திரு.சுமன் கிழக்கிலங்கை இந்துசமய சமூக அபிவிருத்தி சபையின் தலைவரும் மட்டக்களப்பு மாவட்டசெயலக அனர்த்த முகாமைத்துவ உத்தியோகத்தர் திரு.த.துஷ்யந்தன் போரதீவுப்பற்று பிரதேச செயலகத்தின் முன்பள்ளி பருவ அபிவிருத்தி உத்தியோகத்தர் திருப.கமல்ராஜ் மற்றும் ஏனைய ஆலயங்களின் தலைவர்கள் பக்த அடியார்கள் பொதுமக்கள் ஆகியோர்கள் கலந்து கொண்டனது சிறப்பம்வமாகும்
-