சர்வதேச கூட்டுறவு தினத்தை சிறப்பிக்கும் விசேட சமய வழிபாடுகள்


 (லியோன்)

96 வது சர்வதேச கூட்டுறவு தினத்தை சிறப்பிக்கும் விசேட  தேசிய  நிகழ்வுகள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில்  மட்டக்களப்பு வெபர் மைதானத்தில் இன்று பிற்பகல் நடைபெற்றது


இந்நிகழ்வினை சிறப்பிக்கும் வகையில் விசேட சமய வழிபாடுகள் கிழக்கு மாகாண ஆளுநர் ரோகித்த போகொல்லாகம தலைமையில் இன்று காலை மட்டக்களப்பில் நடைபெற்றது

சர்வதேச கூட்டுறவு தினத்தை சிறப்பிக்கும் விசேட தேசிய நிகழ்வின்  மட்டக்களப்பு அமிர்தகழி மாமாங்கேஸ்வரர் ஆலயத்தில் நடைபெற்ற விசேட பூஜை  வழிபாடுகளிலும் ,தொடர்ந்து  மட்டக்களப்பு மங்களாராம விகாரையில் நடைபெற்ற சமய வழிபாடுகளும் கலந்துகொண்டார்  .

இந்நிகழ்வில் மட்டக்களப்பு வலயக்கல்வி திணைக்கள அதிகாரிகள்  , கூட்டுறவு திணைக்கள அதிகாரிகள்  மட்டக்களப்பு அமிர்தகழி மாமாங்கேஸ்வரர் ஆலய வண்ணக்கர்கள் ,உட்பட அரச திணைக்கள அதிகாரிகள் கலந்துகொண்டனர்