பட்டதாரிகளை ஆண்டு அடிப்படையில் இணைத்துக் கொள்ளுமாறு வியாழேந்திரன் கோரிக்கை !



அபிவிருத்தி உத்தியோகத்தர் பதவிக்கு பட்டதாரி பயிலுனர்களாக உள்வாங்கப்பட இருக்கும் பட்டதாரிகளை பட்டம் பெற்ற ஆண்டு அடிப்படையில் தெரிவு செய்யுமாறு தமிழ் தேசியக் கூட்டமைப்பின்  பாராளுமன்ற மன்ற உறுப்பினர் வியாழேந்திரன் பிரதமரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

நேற்றைய தினம் பாராளுமன்ற கட்டிட தொகுதியில் உள்ள பிரதமர் அலுவலகத்தில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்து கிழக்கு மாகாண பட்டதாரிகள் சங்கத்தின் கோரிக்கைகள் அடங்கிய மகஜரை கையளித்தபோதே மேற்படி கோரிக்கையை முன்வைத்துள்ளார்.

அதில் மிக முக்கிய கோரிக்கைகளாக அபிவிருத்தி உத்தியோகத்தர் பதவிக்கு பட்டதாரி
01.பயிலுனர்களாக உள்வாங்கப்பட இருக்கும் பட்டதாரிகளை பட்டம் பெற்ற ஆண்டு அடிப்படையில் தெரிவு செய்ய வேண்டும்.

02. பட்டதாரி நியமனங்கள் வழங்கும் போது  45 வயது வரையானோரை இணைத்துக்கொள்ள வேண்டும்.

03.பட்டதாரி நியமனத்தில் உள்வாரி வெளிவாரி என்ற பாகுபாடு இன்றி அனைவருக்கும் ஒரே மாதிரியான நியமனங்கள் வழங்க வேண்டும்.
உள்ளிட்ட பல கோரிக்கைகள் அடங்கிய மகஜர் ஒன்றை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவர்களிடம் கையளித்து பேசிய போதே பாராளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரன் மேற்படி கோரிக்கைகளை முன்வைத்துள்ளார்.