நீண்டகாலமாக கசிப்பு விற்பனையில் ஈடுபட்டுள்ள மூவர் பொலிசாரினால் கைது


 (லியோன்)

மட்டக்களப்பு  பொலிஸ் பிரிவுக்குற்பட்ட  மட்டக்களப்பு  கருவப்பங்கேணி பகுதியில் கசிப்பை தயாரித்து  நீண்டகாலமாக  விற்பனை வந்த மூவர் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன் கசிப்பு தயாரிப்பதற்காக பயன்படுத்தும்
கோடா மற்றும் உபரணங்களை இன்று புதன்கிழமை அதிகாலை மீட்டுள்ளதாக  மட்டக்களப்பு பொலிஸ் நிலைய பொலிசார் தெரிவித்தனர்


பொலிஸ் விசேட புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த தகவலுக்கு அமைய  மட்டக்களப்பு பொலிஸ் நிலைய உதவி பொறுப்பதிகாரி   பி டி .நாகவத்தையின் வழிகாட்டலின் சாஜன்  ஜெ எஸ் டி .சில்வா தலைமையிலான பொலிஸ் புலனாய்வு பிரிவி பொலிஸ் குழுவினர்களான  ஏ.ஏ. ஜெமில் , சாந்தபண்டார,   பி;. கதிர்காமநாதன் ஆகியோர் கொண்ட குழுவினர்  இன்று அதிகாலை கருவப்பங்கேணி பகுதியில் உள்ள  சந்தேகத்துக்கு இடமான வீட்டை சுற்றிவளைப்பினை  மேற்கொண்டுள்ளனர் .

இதன்போது குறித்த  வீட்டின் நிலப்பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த கசிப்பு தயாரிப்பதற்காக வைக்கப்பட்டிருந்த 100 லீற்றருக்கு மேற்பட்ட  கோடா மற்றும் கசிப்பு தயாரிப்பதற்கான  உபகரணங்கள் கைபற்றப்பற்றுள்ளதுடன்  கசிப்பு  தயாரிப்பில்  ஈடுபட்டுள்ள மூன்று நபர்கள்  கைது செய்யப்பட்டுள்ளதாக  பொலிசார் தெரிவித்தனர் .

இவர்கள் நீண்டகாலமாக கசிப்பை உற்பத்தி செய்து மட்டக்களப்பு மாவட்டத்தில் வெல்லாவெளி, கரடியனாறு, ஆயித்தியமலை , வவுணதீவு, வாகரை போன்ற பிரதேசங்களுக்கு விநியோகித்து வந்துள்ளதாக பொலிசாரின் விசாரணையின் போது தெரியவந்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர் .

 இச்சம்பவம் குறித்து கைது செய்யப்பட்டவர்கள் மட்டக்களப்பு நீதவான்  நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்